குவைத் சர்வதேச விமான நிலையம் மீது ட்ரோன் தாக்குதல்.. உச்சகட்ட பதற்றநிலையில் மத்திய கிழக்கு

United States of America Iran Middle East Ayatollah Ali Khamenei
By Sajithra Feb 28, 2026 03:27 PM GMT
Report

புதிய இணைப்பு  

குவைத் சர்வதேச விமான நிலையத்தை குறிவைத்து ட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இதன் விளைவாக பல ஊழியர்களுக்கு சிறிய காயங்கள் ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 

மேலும், பயணிகள் மற்றும் விமான நிலையத்திற்கு குறைந்த அளவிலான பொருள் சேதம் ஏற்பட்டுள்ளதாக குவைத்தில் உள்ள சிவில் விமானப் போக்குவரத்து பொது ஆணையம் தெரிவித்துள்ளது.

அதன் அதிகாரப்பூர்வ செய்தித் தொடர்பாளர் அப்துல்லா அல்-ராஜ்ஹி, அதிகாரிகள் உடனடியாக சம்பவம் கையாளப்பட்ட இடத்தில் அவசரகால நடைமுறைகளை அங்கீகரித்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

ஐந்தாம் இணைப்பு 

தெஹ்ரானில், இஸ்ரேலிய பாதுகாப்புப் படைகள் (IDF), மூத்த அரசியல் மற்றும் பாதுகாப்புப் பிரமுகர்கள் கூடியிருந்த இடங்களை குறிவைத்து தாக்குதல்களை நடத்தியுள்ளன. 

குவைத் சர்வதேச விமான நிலையம் மீது ட்ரோன் தாக்குதல்.. உச்சகட்ட பதற்றநிலையில் மத்திய கிழக்கு | Us Israel Launch Attack On Iran Explosions Tehran

நான்காம் இணைப்பு  

தெற்கு ஈரானில் பாடசாலை மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் குறைந்தது 51 பேர் கொல்லப்பட்டதுடன் 60 பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

ஈரானின் தெற்கு நகரமான மினாப்பில் உள்ள பெண்கள் பாடசாலை மீதான இஸ்ரேலிய தாக்குதலில் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை 51ஆக உயர்ந்துள்ளதுடன் 60 பேர் காயமடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

பஹ்ரைனில் உள்ள அமெரிக்க கடற்படை சேவை மையம் ஏவுகணை தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளதாக பஹ்ரைன் அரசு செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. 

அமெரிக்க கடற்படையின் 5ஆவது கடற்படையின் சேவை மையம் ஏவுகணை தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளது என்று பஹ்ரைனின் தேசிய தொடர்பு மையம் தெரிவித்துள்ளது.

தாக்குதல் நடத்தியமை தொடர்பில் மேலதிக தகவல்கள் எதுவும் வெளியாகாத நிலையில், விரைவில் தகவல்களை வழங்கவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

தாக்கப்பட்டுள்ள அமெரிக்காவின் 5ஆவது கடற்படையின் தலைமையகத்தின் கீழ் வளைகுடா, செங்கடல், அரேபிய கடல் மற்றும் இந்தியப் பெருங்கடலின் சில பகுதிகள் அடங்கும்.

பஹ்ரைன் மீது ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்கள் இருப்பதாகக் கூறப்படும் அச்சுறுத்தல்களுக்கு மத்தியில், அமெரிக்க தூதரகம் முன்னதாக குடிமக்களை இடத்தில் தஞ்சமடையுமாறு எச்சரித்திருந்தாலும், அமெரிக்க இராணுவத்திடமிருந்து உடனடி கருத்து எதுவும் இல்லை என தெரிவிக்கப்படுகின்றது. 

குவைத் சர்வதேச விமான நிலையம் மீது ட்ரோன் தாக்குதல்.. உச்சகட்ட பதற்றநிலையில் மத்திய கிழக்கு | Us Israel Launch Attack On Iran Explosions Tehran

மூன்றாம் இணைப்பு 

இஸ்ரேலை நோக்கி ஈரான் ஏவுகணைகளை ஏவ ஆரம்பித்துள்ளதாக இஸ்ரேலிய புரட்சிகர காவற்படை தெரிவித்துள்ளது. 

ஈரானில் இருந்து ஏவப்பட்ட ஏவுகணைகள் இஸ்ரேலை நோக்கிச் செல்வது அடையாளம் காணப்பட்டதாக இஸ்ரேலிய இராணுவம் தெரிவித்துள்ளது.

இது நாட்டின் பல பகுதிகளில் பாதுகாப்பு ஒலிச்சத்தங்களை எழுப்பியுள்ளதாகவும் தெரிவித்துள்ளது. 

இந்நிலையில், வான்வழி பாதுகாப்பு படை தற்போது அச்சுறுத்தல்களைக் கண்டறிந்து இடைமறித்து வருவதாகவும் இஸ்ரேல் தன்னைத்தானே பாதுகாத்துக் கொள்ள உரிமை உண்டு எனவும் இஸ்ரேலிய புரட்சிகர காவற்படை சுட்டிக்காட்டியுள்ளது. 

இரண்டாம் இணைப்பு 

அமெரிக்க மற்றும் ஈரானிய தாக்குதல்களுக்கு ஈரான் மிக மோசமான விதத்தில் பதிலளிக்கும் என்று ஈரானிய அதிகாரி ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

அமெரிக்க - இஸ்ரேலிய தாக்குதல்களுக்கு பதிலடி கொடுக்க தெஹ்ரான் தயாராகி வருவதாகவும், எதிர் தாக்குதல்கள் கொடூரமான வகையில் இருக்கும் என்றும் ஈரானிய அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

அதேநேரம், ஈரானிய நாடாளுமன்றத்தின் தேசிய பாதுகாப்புக் குழுவின் தலைவர் இப்ராஹிம் அசிஸி, நீங்கள் தொடங்கிய இந்தத் தாக்குதல்களை முடிவுக்குக் கொண்டுவருவது இனி உங்கள் கைகளில் இல்லை என கடுமையாக எச்சரித்துள்ளார். 

முதலாம் இணைப்பு 

அமெரிக்காவும் இஸ்ரேலும் ஈரான் மீது சற்று முன்னர் தாக்குதலை ஆரம்பித்துள்ளன. 

இஸ்ரேல் அந்நாட்டின் மீது ஏவுகணைத் தாக்குதலை நடத்தியதாக அறிவித்த நிலையில், தெஹ்ரான் முழுவதும் வெடிச்சத்தங்கள் கேட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. 

குவைத் சர்வதேச விமான நிலையம் மீது ட்ரோன் தாக்குதல்.. உச்சகட்ட பதற்றநிலையில் மத்திய கிழக்கு | Us Israel Launch Attack On Iran Explosions Tehran

பல ஏவுகணைகள் தெஹ்ரானில் உள்ள பல்கலைக்கழக தெரு மற்றும் ஜோம்ஹோரி பகுதியைத் தாக்கியதாக வெளிநாட்டு செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. 

பிரான்ஸில் சாதனை படைத்த இலங்கை தமிழர்

பிரான்ஸில் சாதனை படைத்த இலங்கை தமிழர்

அலி கமேனியின் அலுவலகம்.. 

அணுசக்தி திட்டம் தொடர்பாக ஈரானை ஒரு ஒப்பந்தத்திற்கு அழுத்தம் கொடுக்க ஏராளமான போர் விமானங்கள் மற்றும் போர்க்கப்பல்களை ஒன்று திரட்டியுள்ள அமெரிக்காவுடன் கூட்டு இராணுவ நடவடிக்கையாக இந்த தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக அமெரிக்க அதிகாரி ஒருவர் குறிப்பிட்டுள்ளார். 

குவைத் சர்வதேச விமான நிலையம் மீது ட்ரோன் தாக்குதல்.. உச்சகட்ட பதற்றநிலையில் மத்திய கிழக்கு | Us Israel Launch Attack On Iran Explosions Tehran

ஈரானின் தலைநகரில் நடந்த தாக்குதல் உயர்மட்ட தலைவர் அயதுல்லா அலி கமேனியின் அலுவலகங்களுக்கு அருகில் நடந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

ஈரானின் அரை-அதிகாரப்பூர்வ தஸ்னிம் செய்தி நிறுவனம், தெஹ்ரானின் வடக்கு செய்யத்கந்தன் பகுதியிலும் வெடிப்புகள் ஏற்பட்டதாக தெரிவித்துள்ளது.

இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ், "இஸ்ரேல் அரசுக்கு அச்சுறுத்தல்களை அகற்றுவதற்காக" இந்த தாக்குதலை "முன்னெச்சரிக்கை நடவடிக்கை" என்று விவரித்தார்.

இஸ்ரேலில் இருந்து வெளியேற விரும்பினால் அதை இன்றையே செய்யுங்கள்! விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

இஸ்ரேலில் இருந்து வெளியேற விரும்பினால் அதை இன்றையே செய்யுங்கள்! விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

பாகிஸ்தான் - ஆப்கானிஸ்தான் இடையே 'நேரடிப் போர்': தலைநகர் காபூலில் குண்டுவீச்சு

பாகிஸ்தான் - ஆப்கானிஸ்தான் இடையே 'நேரடிப் போர்': தலைநகர் காபூலில் குண்டுவீச்சு

மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US