பாகிஸ்தான் - ஆப்கானிஸ்தான் இடையே 'நேரடிப் போர்': தலைநகர் காபூலில் குண்டுவீச்சு
ஆப்கானிஸ்தானுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே எல்லையில் நிலவி வந்த பதற்றம் தற்போது "நேரடிப் போராக" (Open War) மாறியுள்ளது.
ஆப்கானிஸ்தானின் தலைநகர் காபூல் மற்றும் தலிபான் தலைவர்களின் முக்கிய தளமான கந்தகார் ஆகிய நகரங்களில் பாகிஸ்தான் இராணுவம் இன்று வான்வழித் தாக்குதல்களை நடத்தியது.
தலிபான் படைகள் பாகிஸ்தான் மீது நடத்திய ஆளில்லா விமானத் தாக்குதலுக்கு பதிலடியாகவே, ஏவுகணைகள் மூலம் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாக பாகிஸ்தான் தெரிவித்துள்ளது.
உயிர்ச்சேதம்
இந்த மோதலில் இருதரப்பிலும் கடும் உயிர்ச்சேதம் ஏற்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
தலிபான்கள் தரப்பில் 274 பேர் கொல்லப்பட்டதாக பாகிஸ்தான் கூறுகிறது, அதே சமயம் 55 பாகிஸ்தான் வீரர்களைக் கொன்றதாக ஆப்கானிஸ்தானின் தலிபான்கள் தெரிவிக்கின்றனர்.

எனினும், இரு நாடுகளும் தங்களின் தரப்பில் குறைந்த அளவிலான உயிரிழப்புகளையே (பாகிஸ்தான் 12, ஆப்கானிஸ்தான் 13) அதிகாரப்பூர்வமாக உறுதி செய்துள்ளன.
அமைதிப் பேச்சுவார்த்தை
தலைநகர் காபூலில் குண்டுகள் வெடித்ததில் பெரும் தீ பரவல் ஏற்பட்டுள்ளதுடன், பொதுமக்கள் தரப்பிலும் உயிரிழப்புகள் நேர்ந்துள்ளதாகத் தலிபான்கள் தெரிவித்துள்ளனர்.

"தங்களின் பொறுமை எல்லை கடந்துவிட்டதாக" பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் கவாஜா ஆசிஃப் எச்சரித்துள்ள நிலையில், ஆப்கானிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சகம் அமைதிப் பேச்சுவார்த்தைக்கு விருப்பம் தெரிவித்துள்ளது.
கத்தார் நாட்டின் மத்தியஸ்தத்தின் மூலம் இந்தப் பிரச்சினையை சுமுகமாகத் தீர்க்க விரும்புவதாகவும், வன்முறைக்குத் தங்களுக்கு உடன்பாடில்லை என்றும் தாலிபான் செய்தித் தொடர்பாளர் ஜபிஹுல்லா முஜாஹித் தெரிவித்துள்ளார்.
ஈழத் தமிழர்களின் விடுதலைக்கான பாதையை யார் வழிநடத்துவது.. 18 மணி நேரம் முன்
விஜய்க்கு நடிகை உடன் தொடர்பு.. 2021ல் தொடங்கிய சண்டை! விவாகரத்து மனுவில் சங்கீதா குறிப்பிட்ட அதிர்ச்சி தகவல் Cineulagam
காந்திமதியை வீட்டைவிட்டு துரத்திய சக்திவேல், கோமதி தரமான செயல்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் Cineulagam
இந்த வாரம் ஞாயற்றுக்கிழமை சன் டிவியில் ஒளிபரப்பாகும் மூன்று திரைப்படங்கள்.. பிளாக்பஸ்டர் மூவிஸ் Cineulagam
அந்த நடிகை வெளியிட்ட போட்டோ.. எனக்கும் என் குழந்தைகளுக்கும் அவமானம்: விஜய் மீது சங்கீதா அடுக்கடுக்கான புகார் Cineulagam
ஆளுங்கட்சிக்கு மரண அடி கொடுத்துள்ள தேர்தல் முடிவுகள்: பிரதமர் ராஜினாமா செய்ய வலியுறுத்தல் News Lankasri
ட்ரம்ப் எந்த நேரத்திலும் முடிவெடுக்கலாம்... ஈரானில் இருந்து தூதரக அதிகாரிகளை வெளியேற்றிய பிரித்தானியா News Lankasri