கைதாவதற்கு ஒருநாள் முன் எப்ஸ்டீனின் திட்டம்: அம்பலமாகியுள்ள தகவல்கள்..
பாலியல் குற்றச்சாட்டுகளுக்காக 2019ஆம் ஆண்டு அமெரிக்க அதிகாரிகளால் கைது செய்யப்படுவதற்கு ஒருநாள் முன்னதாக, சர்ச்சைக்குரிய தொழிலதிபர் ஜெப்ரி எப்ஸ்டீன் மொராக்கோவில் பல மில்லியன் டொலர் மதிப்புள்ள பிரம்மாண்ட அரண்மனை ஒன்றை வாங்க முயற்சி செய்திருந்தமை தற்போது அம்பலமாகியுள்ளது.
அமெரிக்க நீதித்துறை வெளியிட்டுள்ள புதிய ஆவணங்களின்படி, 2019 ஜூலை 5 அன்று, அதாவது அவர் கைதாவதற்கு முதல் நாள், இந்த சொத்துக்காக சுமார் 14.95 மில்லியன் டொலர் பணப்பரிமாற்றத்திற்கான ஆவணத்தில் எப்ஸ்டீன் கையெழுத்திட்டுள்ளார்.
பாதுகாப்பான புகலிடம்
மராகேச் (Marrakech) நகரின் ஆடம்பரப் பகுதியான பால்மேரேயில் அமைந்துள்ள 'பின் எந்நாகில்' (Bin Ennakhil) என்ற இந்த அரண்மனை, 1,300 கலைஞர்களால் செதுக்கப்பட்ட கலைநயம் மிக்க மாளிகையாகும்.

2011ஆம் ஆண்டு முதல் இந்தச் சொத்தை வாங்க எப்ஸ்டீன் முயன்று வந்த நிலையில், விலையில் ஏற்பட்ட இழுபறியால் அது தள்ளிப்போய்க்கொண்டே இருந்தது.
அமெரிக்காவுடன் கைதிகளை ஒப்படைக்கும் ஒப்பந்தம் இல்லாத நாடு மொராக்கோ என்பதால், எதிர்காலத்தில் கைது நடவடிக்கையில் இருந்து தப்பிக்க ஒரு 'பாதுகாப்பான புகலிடமாக' இந்த அரண்மனையை அவர் கருதியிருக்கலாம் என ஊடகங்கள் சந்தேகிக்கின்றன.
பில் கிளிண்டனின் அழைப்பு
இருப்பினும், எப்ஸ்டீன் கைது செய்யப்பட்ட மூன்று நாட்களுக்குப் பிறகு, அவரது கணக்காளர் இந்தப் பணப்பரிமாற்றத்தை ரத்து செய்ததால் அந்த விற்பனை முழுமையடையவில்லை.

எப்ஸ்டீனுக்கும் மொராக்கோவிற்கும் இடையிலான தொடர்பு 2000-களின் தொடக்கத்திலேயே இருந்துள்ளது.
2002-இல் மொராக்கோ மன்னர் முகமதுவின் திருமணத்தில், அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி பில் கிளிண்டனின் அழைப்பின் பேரில் எப்ஸ்டீன் கலந்துகொண்டமையும் குறிப்பிடத்தக்கது.
முதல்முறையாக அதிநவீன F-22 ராப்டர் ஸ்டெல்த் போர் விமானங்களை இஸ்ரேலில் நிலைநிறுத்தும் அமெரிக்கா News Lankasri
என்னது மயில் கர்ப்பமா, வீட்டில் வெடித்த பெரிய பிரச்சனை... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் எபிசோட் Cineulagam
ட்ரம்ப் எந்த நேரத்திலும் முடிவெடுக்கலாம்... ஈரானில் இருந்து தூதரக அதிகாரிகளை வெளியேற்றிய பிரித்தானியா News Lankasri
புதிய நிகழ்ச்சியை தொடங்கியுள்ள விஜய் டிவி... முதலில் கலந்துகொள்ளும் பிரபலங்கள் யார் பாருங்க Cineulagam