ஈரான் - அமெரிக்கா இடையே போர் பதற்றம்: தூதரக அதிகாரிகளைத் திரும்பப் பெறுகிறது பிரித்தானியா
மேற்கு ஆசியாவில் அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே போர் பதற்றம் அதிகரித்து வரும் சூழலில், ஈரானின் தலைநகர் தெஹ்ரானில் உள்ள தனது தூதரக அதிகாரிகளை பிரித்தானியா தற்காலிகமாக மீளப் பெற்றுள்ளது.
இது ஒரு "முன்னெச்சரிக்கை நடவடிக்கை" என்று பிரித்தானிய வெளியுறவுத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.
இதேபோல், இஸ்ரேலில் உள்ள அமெரிக்க தூதரகத்தின் அத்தியாவசியமற்ற பணியாளர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினரை உடனடியாக நாட்டை விட்டு வெளியேறுமாறு அமெரிக்க தூதர் மைக் ஹக்கபி அறிவுறுத்தியுள்ளார்.
இராணுவ நடவடிக்கை
ஈரான் மீதான ராணுவ நடவடிக்கை குறித்து இன்னும் 10 நாட்களில் முடிவெடுக்கப்படும் என அதிபர் டொனால்ட் ட்ரம்ப் ஏற்கனவே எச்சரித்திருந்த நிலையில், சீனா, இந்தியா மற்றும் கனடா ஆகிய நாடுகளும் ஈரானில் உள்ள தங்கள் குடிமக்களை உடனடியாக வெளியேறுமாறு கேட்டுக்கொண்டுள்ளன.

ஈரானின் அணுசக்தி திட்டங்கள் குறித்த பேச்சுவார்த்தையில் "முன்னேற்றம்" ஏற்பட்டுள்ளதாக கூறப்பட்டாலும், அமெரிக்கா இப்பிராந்தியத்தில் போர் கப்பல்கள் மற்றும் போர் விமானங்களை பெருமளவில் குவித்து வருவது பதற்றத்தை உச்சக்கட்டத்திற்கு கொண்டு சென்றுள்ளது.
ஏப்ரலில் இலங்கை சந்திக்கப் போகும் பொருளாதார சரிவு! முதலீட்டாளர்களை அச்சப்படுத்தும் செய்திக்கு அநுர பதிலடி
ரோஹினியால் பாத்ரூமில் மறைந்து கதறும் மனோஜ், விஜயாவிற்கு ஷாக் கொடுத்த மீனா.. சிறகடிக்க ஆசை சீரியல் Cineulagam
ட்ரம்ப் எந்த நேரத்திலும் முடிவெடுக்கலாம்... ஈரானில் இருந்து தூதரக அதிகாரிகளை வெளியேற்றிய பிரித்தானியா News Lankasri
புதிய நிகழ்ச்சியை தொடங்கியுள்ள விஜய் டிவி... முதலில் கலந்துகொள்ளும் பிரபலங்கள் யார் பாருங்க Cineulagam
முதல்முறையாக அதிநவீன F-22 ராப்டர் ஸ்டெல்த் போர் விமானங்களை இஸ்ரேலில் நிலைநிறுத்தும் அமெரிக்கா News Lankasri