இலங்கையில் ஆங்கிலக் கல்வியை மேம்படுத்த 34 புதிய அமெரிக்க சமாதானப் படை தொண்டர்கள் வருகை
இலங்கையில் இரண்டு ஆண்டுகள் சேவை செய்வதற்கு முன்னதான பயிற்சிகளை மேற்கொள்வதற்காக, 34 புதிய அமெரிக்க சமாதானப் படை பயிற்சித் தொண்டர்கள் இலங்கையை வந்தடைந்துள்ளனர்.
எதிர்வரும் நவம்பர் மாதம் சேவை உறுதிமொழி ஏற்பதற்கு முன்பாக, இவர்கள் சிங்களம் அல்லது தமிழ் மொழி, இலங்கைக் கலாச்சாரம் மற்றும் அமெரிக்க ஆங்கிலக் கற்பித்தல் முறைகள் தொடர்பாகத் தீவிரப் பயிற்சிகளை மேற்கொள்ளவுள்ளனர்.
ஆங்கில கல்வி விரிவுப்படுத்தல்
சத்தியப்பிரமாண நிகழ்வுக்குப் பிறகு, இவர்கள் வட மாகாணம் மற்றும் வடமத்திய மாகாணங்களில் உள்ள பாடசாலைகளில் இலங்கை ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுடன் இணைந்து ஆங்கிலக் கல்வியை விரிவுபடுத்தப் பணியாற்றுவர்.
இதன் பிரகாரம் இவர்கள் உள்ளூர் குடும்பங்களுடன் இணைந்து வசிக்கவுள்ளதுடன், அவர்கள் சேவை செய்யும் சமூகத்தின் ஒரு அங்கமாகவும் மாறுவார்கள் என கருத்தப்படுகிறது.
கொழும்பிலுள்ள அலுவலகத்தில் இடம்பெற்ற வரவேற்பு நிகழ்வில், இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் எரிக் மயர் இத்தொண்டர்களை வரவேற்றார்.

இரு நாடுகளுக்கும் இடையிலான பிணைப்பு
"இரு நாடுகளுக்கும் இடையிலான வலுவான பிணைப்பு மக்கள் சார்ந்த தொடர்புகளாலேயே கட்டியெழுப்பப்படுகிறது என அவர் தெரிவித்தார். அமெரிக்கர்களை அந்தப் பணியின் மையத்தில் நிறுத்துகிறது," எனவும் அவர் குறிப்பிட்டார்.
இலங்கையில் Peace Corps சேவை 1962 ஆம் ஆண்டு தொடங்கியது. இதுவரை 500-க்கும் மேற்பட்ட அமெரிக்கத் தொண்டர்கள் கல்வி, சுகாதாரம், விவசாயம், சமூக மேம்பாடு மற்றும் சுனாமி மறுவாழ்வுப் பணிகளில் இங்கு பணியாற்றியுள்ளனர்.
முன்னதாக 2018 ஆம் ஆண்டில் ஆங்கிலக் கல்வியை வலுப்படுத்தும் நோக்கத்துடன் இத்திட்டம் மீண்டும் முறையாக ஆரம்பிக்கப்பட்டமைக் குறிப்பிடத்தக்கது.
மட்டக்குளியில் மூன்று பேர் பலியான கோர விபத்து! கடும் கோபத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் - சாரதியின் பரபரப்பு வாக்குமூலம்