22ஆவது திருத்தத்திற்கு கடும் எதிர்ப்பு - அநுர ஆட்சியை கவிழ்க்க மாபெரும் பேரணிக்கு அழைப்பு

Sajith Premadasa Sri Lankan protests Sri Lankan Peoples Sri Lanka Government Protest
By Rakesh Sep 13, 2026 01:14 PM GMT
Report

அரசமைப்பின் 22 ஆவது திருத்தத்துக்கு எதிராக மக்களை அணிதிரட்டி, அமைதி வழியிலான ஆர்ப்பாட்டம் எதிர்வரும் 24 ஆம் திகதி கொழும்பில் முன்னெடுக்கப்படவுள்ளது என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.

இதற்காக அனைத்து முற்போக்கு மக்களின் ஆதரவையும் எதிர்பார்ப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்ட உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் மற்றும் தொகுதி அமைப்பாளர்களுடனான சந்திப்பு எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இன்று(13.09.2026) இடம்பெற்றுள்ளது.

இதில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே எதிர்க்கட்சித் தலைவர் மேற்கண்டவாறு சுட்டிக்காட்டியுள்ளார்.

22ஆவது திருத்தம்

அவர் மேலும் தெரிவிக்கையில்,

அநுர குமார திஸாநாயக்க தலைமையிலான அரசு ஜனநாயகத்தையும், நீதிமன்றத்தின் சுதந்திரத்தையும், சட்டத்தின் ஆட்சியையும் சீரழித்து வருகின்றது. 22 ஆவது திருத்தத்துக்கு எதிராக முதன்முதலில் ஐக்கிய மக்கள் சக்தியே குரல் கொடுத்தது.

22ஆவது திருத்தத்திற்கு கடும் எதிர்ப்பு - அநுர ஆட்சியை கவிழ்க்க மாபெரும் பேரணிக்கு அழைப்பு | Strong Opposition To The 22Nd Amendment

எதிர்காலத்தில் இதற்கு எதிரான நடவடிக்கைகளையும் முன்னெடுப்புகளையும் ஜனநாயக ரீதியில் மேலும் வலுப்படுத்துவோம்.

தற்போது நாடு பாரிய சவால்களை எதிர்கொண்டுள்ளது. தற்போதைய தேசிய மக்கள் சக்தி அரசாங்கம், இந்த 22 ஆவது திருத்தத்தின் ஊடாக ஜனநாயகத்தை அழித்து, தனிக்கட்சி ஆட்சியைக் கொண்டுவந்து, நாட்டின் அதிகாரத்தைப் பெலவத்தைக்குக் கொண்டு செல்லும் முயற்சியைத் தோற்கடிக்க வேண்டும்.

24ஆம் திகதி அணித்திரளும் மக்கள்

மக்களை ஏமாற்றி மூன்றில் இரண்டு பெரும்பான்மையைப் பெற்றுக்கொண்டனர். நாடாளுமன்றத்தில் 159 ஆசனங்கள் தேசிய மக்கள் சக்திக்கு உண்டு என்பதற்காக, 220 இலட்சம் மக்களின் உரிமைகளை நசுக்க இடமளிக்க முடியாது. இதற்கு எதிராகப் பெரும் மக்கள் பலத்தைத் திரட்டுவோம்.

22ஆவது திருத்தத்திற்கு கடும் எதிர்ப்பு - அநுர ஆட்சியை கவிழ்க்க மாபெரும் பேரணிக்கு அழைப்பு | Strong Opposition To The 22Nd Amendment

பிரஜைகளுக்கும் எதிர்கால சந்ததியினருக்கும் எதிராகக் கொண்டுவரப்படும் இந்த மோசமான 22 ஆவது திருத்தத்தைத் தோற்கடிப்பதற்கான பெரும் நடவடிக்கை எடுக்கப்படும். இது அரசின் மாற்றத்துக்கு வழிவகுக்கும்.

அரசின் சர்வாதிகார ஆட்சியைத் தோற்கடிக்கும் முதல் அடியைச் எதிர்வரும் செப்டெம்பர் 24 ஆம் திகதி ஐக்கிய மக்கள் சக்தி பதிக்கும் என்றார். 

22ஆவது திருத்தத்திற்கு கடும் எதிர்ப்பு - அநுர ஆட்சியை கவிழ்க்க மாபெரும் பேரணிக்கு அழைப்பு | Strong Opposition To The 22Nd Amendment

22ஆவது திருத்தத்திற்கு கடும் எதிர்ப்பு - அநுர ஆட்சியை கவிழ்க்க மாபெரும் பேரணிக்கு அழைப்பு | Strong Opposition To The 22Nd Amendment

கொழும்பில் பிரபல நிறுவனத்திற்கு நீதிமன்றின் அதிரடி உத்தரவு! அழகுசாதனப் பொருட்கள் கொள்வனவு செய்வோருக்கான அறிவுறுத்தல்

கொழும்பில் பிரபல நிறுவனத்திற்கு நீதிமன்றின் அதிரடி உத்தரவு! அழகுசாதனப் பொருட்கள் கொள்வனவு செய்வோருக்கான அறிவுறுத்தல்

விலை அதிகரிப்பைக் கோரும் தனியார் எரிபொருள் நிறுவனங்கள்!

விலை அதிகரிப்பைக் கோரும் தனியார் எரிபொருள் நிறுவனங்கள்!



7ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு, பம்பலப்பிட்டி

14 Sep, 2019
மரண அறிவித்தல்

தொண்டைமானாறு, Lausanne, Switzerland

01 Sep, 2026
அகாலமரணம்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி தெற்கு, புலோலி

14 Sep, 2021
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் மேற்கு

14 Sep, 2018
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

Sea Port Estate, Malaysia, Petaling Jaya, Malaysia, Montreal, Canada, Scarborough, Canada, Oakville, Canada

11 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கொழும்பு, வட்டுக்கோட்டை, சுவாசி-லெ-ருவா, France

07 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, யாழ்ப்பாணம், சிங்கப்பூர், Singapore, நியூஸ்லாந்து, New Zealand

13 Sep, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

இருபாலை, கொழும்பு

03 Sep, 2023
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சரசாலை வடக்கு, சுவிஸ், Switzerland, England, United Kingdom

14 Sep, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நவாலி தெற்கு, Zürich, Switzerland

12 Sep, 2025
மரண அறிவித்தல்

மந்துவில், கொடிகாமம்

11 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Bondy, France

09 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மாவிட்டபுரம், முரசுமோட்டை

20 Sep, 2025
மரண அறிவித்தல்

கிளிநொச்சி, Rapperswil-Jona, Switzerland

08 Sep, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, சிலாபம், Oslo, Norway

02 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 3ம் வட்டாரம், பருத்தித்துறை, அல்வாய் வடக்கு, சூரிச், Switzerland

10 Sep, 2021
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தண்ணீரூற்று, வத்தளை, Tolworth, United Kingdom

11 Sep, 2023
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Caledon, Canada

06 Sep, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US