விலை அதிகரிப்பைக் கோரும் தனியார் எரிபொருள் நிறுவனங்கள்!
மத்திய கிழக்கில் நிலவும் மோதல்கள் காரணமாக கடல் வழிகள் பாதிக்கப்பட்டு, எரிபொருள் இறக்குமதிச் செலவு கணிசமாக உயர்ந்துள்ளதால், தற்போதைய விலையில் எரிபொருளை விற்பனை செய்வது கடினமாக உள்ளதாக தனியார் எரிபொருள் விநியோகஸ்தர்கள் அரசாங்கத்திற்குத் தெரியப்படுத்தியுள்ளனர்.
எல்.ஐ.ஓ.சி, சினோபெக் மற்றும் RM Parks ஆகிய தனியார் நிறுவனங்கள் இறக்குமதிச் செலவுக்கு ஏற்ப எரிபொருள் விலைகளை சீரமைக்குமாறு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இருதரப்பு ஒப்பந்தங்களின்படி, இதில் சட்டரீதியான தடைகள் எதுவுமில்லை என்பதால் அரசாங்கம் இதைப் பரிசீலிக்கக்கூடும் என எரிசக்தி அமைச்சர் அனுர கருணாதிலக்க தெரிவித்துள்ளார்.
தொடர் மாற்றங்கள்
இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் (CPC) நஷ்டத்தைச் சந்தித்த போதிலும், உடனடியாக இந்தச் சுமையை மக்கள் மீது சுமத்தாமல் விலையைத் தக்கவைக்கவும், விலை அதிகரிப்பின் தாக்கத்தைக் குறைக்கவும் நடவடிக்கை எடுத்து வருகிறது.

இதேவேளை, உலகச் சந்தையில் மசகு எண்ணெய் விலையில் ஏற்படும் தொடர் மாற்றங்கள் மற்றும் இறக்குமதிச் செலவு சூத்திரத்தின் மாறுபாடுகள் காரணமாக, எதிர்வரும் மாதங்களில் வழக்கத்தை விடக் கூடுதல் இடைவெளிகளில் அடிக்கடி விலை திருத்தங்களை மேற்கொள்ள நேரிடலாம் என CPC தலைவர் டி.ஜே. ராஜகருணா விளக்கமளித்துள்ளார்.