ராஜபக்ச குடும்பத்திற்கு தொடரும் ஏமாற்றம்..
நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவின் பிணை மனு தொடர்பான உத்தரவு நவம்பர் 3ஆம் திகதி அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒரு மாதத்திற்கும் மேலாக நாமல் ராஜபக்ச விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
நாமல், ஷிரந்தி என ராஜபக்ச குடும்பத்தில் எதிர்பாராத கைதுகள் தென்னிலங்கை அரசியலை சூடுபிடிக்க வைத்தன.
கொழும்பு கோட்டையில் உள்ள டிரான்ஸ் வொர்க்ஸ் சதுக்கத்தில் அமைந்துள்ள காணியை, கலப்பு பயன்பாட்டு அபிவிருத்தித் திட்டத்திற்காக க்ரிஷ் குழுமத்திற்கு மாற்றுவதற்கு உதவியதற்காக 100 மில்லியன் ரூபா இலஞ்சம் பெற்றதாக நாமல் மீது குற்றச்சாட்டின் முன்வைக்கப்பட்டுள்ளது.
மனைவி, மகன் என தனது குடும்பத்தின் தற்போதைய நிலை முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கு அரசியலில் ஒரு பெரும் பின்னடைவு என்றே சொல்லலாம் .
இது உள்ளிட்ட பல முக்கிய அரசியல் நகர்வுகள் குறித்து விரிவாக ஆராய்கின்றது நாட்டு நடப்பு நிகழ்ச்சி,