விடுதலைப் புலிகள் மீதான தடையை கனடா நீக்க வேண்டும்! சிறீதரன் எம்.பி. வலியுறுத்தல்

Sri Lankan Tamils Sri Lankan Peoples Canada
By Rakesh Oct 28, 2026 12:25 PM GMT
Report

தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் மீது கனடா விதித்துள்ள தடையை நீக்குவதற்கான நடவடிக்கைகளை அந்நாடு முதலில் முன்னெடுத்து, ஏனைய உலக நாடுகளும் தமது தடைகளை நீக்குவதற்கு முன்னுதாரணமாகவும் வழிகாட்டியாகவும் செயற்பட வேண்டும் என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் யாழ்ப்பாணம் - கிளிநொச்சி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் கோரிக்கை விடுத்துள்ளார்.

கனடாவின் தலைநகர் ஒட்டாவாவில் நேற்று(28.10.2026) அந்நாட்டின் பிரதான எதிர்க்கட்சியான கன்சர்வேட்டிவ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் எதிர்க்கட்சித் தலைவரின் அலுவலகப் பிரதிநிதிகளுடன் நடைபெற்ற விசேட சந்திப்பின்போதே அவர் இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளார்.

இந்தச் சந்திப்பில் கன்சர்வேட்டிவ் கட்சியின் இலங்கைத் தமிழர் விவகாரங்களுக்குப் பொறுப்பானவரும், சர்வதேச மனித உரிமைகள் தொடர்பான நாடாளுமன்ற உப குழுவின் உப தலைவருமான சுவலோய் மஜும்தார், நாடாளுமன்ற உறுப்பினர் கொஸ்டாஸ் மெனெகாகிஸ், எதிர்க்கட்சித் தலைவரின் அலுவலக வெளித்தொடர்புப் பிரிவைச் சேர்ந்த டரினா ஒஸ்ட்ரோவ்ஸ்கா ஆகியோர் கலந்துகொண்டனர்.

விடுதலைப் புலிகள் மீதான தடையை கனடா நீக்க வேண்டும்! சிறீதரன் எம்.பி. வலியுறுத்தல் | An Appeal To Tamils Living In Canada

நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனுடன் கனடாவைச் சேர்ந்த தமிழ்த் தேசியச் செயற்பாட்டாளர் அமலிதனும் அவரது குழுவினரும் பங்கேற்றிருந்தனர். இலங்கையில் ஆயுதப் போர் முடிவடைந்து 17 ஆண்டுகள் கடந்துள்ள நிலையில், தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் மீதான தடையைத் தொடர்ந்து பேணுவதற்கான அவசியத்தை கனடா மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று இதன்போது சிறீதரன் எம்.பி. சுட்டிக்காட்டினார்.

விடுதலை புலிகள் அமைப்பு மீதான தடைகள்

கனடா இந்த விடயத்தில் முதற்கட்ட நடவடிக்கைகளை முன்னெடுத்துத் தடையை நீக்குவதுடன், ஏனைய நாடுகளும் இதுபோன்ற நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான வழியை ஏற்படுத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

இந்தக் கோரிக்கை தொடர்பில் கருத்துத் தெரிவித்த கனேடிய நாடாளுமன்ற உறுப்பினர்கள், விடுதலைப்புலிகள் மீதான தடையை நீக்குவது குறித்து தமது கட்சித் தலைமையுடன் ஆலோசித்துச் சாதகமான முடிவை எடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தனர்.

விடுதலைப் புலிகள் மீதான தடையை கனடா நீக்க வேண்டும்! சிறீதரன் எம்.பி. வலியுறுத்தல் | An Appeal To Tamils Living In Canada

இந்தச் சந்திப்பில் இரண்டாவது முக்கிய விடயமாக, யாழ்ப்பாணம் - செம்மணியில் கண்டெடுக்கப்பட்ட மனித எச்சங்கள் தொடர்பான விசாரணைகளுக்குச் சர்வதேச தரத்திலான தடயவியல் தொழில்நுட்ப உதவிகளையும் நவீன ஆய்வு உபகரணங்களையும் பெற்றுக்கொடுப்பது குறித்து விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.

செம்மணி மனிதப் புதைகுழி தொடர்பான விசாரணைகள் நம்பகத்தன்மையுடனும் வெளிப்படைத்தன்மையுடனும் முன்னெடுக்கப்படுவதற்குச் சர்வதேச நிபுணர்களின் நேரடிப் பங்களிப்பு, மனித எச்சங்களை விஞ்ஞான ரீதியாகப் பரிசோதிப்பதற்கான நவீன தடயவியல் கருவிகள் ஆகியன அவசியமானவை என்று சுட்டிக்காட்டப்பட்டதுடன், இதற்காகக் கனடா உரிய தொழில்நுட்ப உதவிகளையும் சர்வதேசத் தடயவியல் நிபுணத்துவத்தையும் பெற்றுக்கொடுக்க முன்வர வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டது.   

யாழ்ப்பாணத்தில் மீண்டும் திரையிடப்படும் ‘போராட்டம்’ திரைப்படம்

யாழ்ப்பாணத்தில் மீண்டும் திரையிடப்படும் ‘போராட்டம்’ திரைப்படம்

யோஷித - வசந்த கரன்னாகொட வழக்கு: நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

யோஷித - வசந்த கரன்னாகொட வழக்கு: நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு



மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கொழும்பு

26 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

தொண்டைமானாறு, Bandarawela, Gonesse, France

20 Oct, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Bristol, United Kingdom

12 Oct, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில், பக்ரைன், Bahrain

10 Nov, 2014
7ம் ஆண்டு நினைவஞ்சலி

குடத்தனை, முகமாலை, பரந்தன்

28 Oct, 2019
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், வட்டக்கச்சி, சுவிஸ், Switzerland

30 Oct, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை தெற்கு, கொழும்பு

29 Oct, 2024
9ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புதுக்குடியிருப்பு

07 Nov, 2017
நன்றி நவிலல்

சுழிபுரம், வட்டுக்கோட்டை

21 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, வட்டக்கச்சி, கிளிநொச்சி

08 Nov, 2025
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், காரைநகர் சின்னாலடி

11 Nov, 2022
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Toronto, Canada, கொழும்பு

26 Oct, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, வல்வெட்டித்துறை, Shrewsbury, United Kingdom

28 Oct, 2012
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Mississauga, Canada

15 Nov, 2016
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொழும்பு, கனடா, Canada

27 Oct, 2011
4ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

பூந்தோட்டம், மகாறம்பைக்குளம்

31 Oct, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, சங்குவேலி

27 Oct, 2013
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொழும்பு 13

28 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கிளிநொச்சி, அனலைதீவு, Brampton, Canada

29 Oct, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், இராமநாதபுரம், Villetaneuse, France

27 Oct, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, கரம்பொன், Hamburg, Germany, Newbury Park, United Kingdom

27 Oct, 2020
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland

26 Oct, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பளை, Tellippalai

06 Nov, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, St. Gallen, Switzerland

26 Oct, 2022
மரண அறிவித்தல்

கரவெட்டி மேற்கு, Clamart, France

24 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
21ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, யாழ்ப்பாணம், Idar- Oberstein, Germany, Coventry, United Kingdom

18 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US