10 பேரில் ஒருவருக்கு பக்கவாதம்! இலங்கையில் வெளியான அதிர்ச்சித் தகவல்
இலங்கையில் கடந்த பத்து ஆண்டுகளில் பக்கவாதம் (Stroke) ஏற்படும் நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக களனி பல்கலைக்கழகத்தின் நரம்பியல் துறை பேராசிரியர் உதய ரணவக்க தெரிவித்துள்ளார்.
கொழும்பில் தேசிய பக்கவாத சங்கம் ஏற்பாடு செய்த ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்தார்.
நோயாளர்களின் எண்ணிக்கை
இலங்கையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின்படி, ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட சமூகங்களில் சுமார் 10 பேரில் ஒருவர் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரியவந்துள்ளது.
கடந்த பத்து ஆண்டுகளாக பக்கவாத நோயாளர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

இலங்கை முழுவதும் தற்போது சுமார் 10 சிறப்பு பக்கவாத சிகிச்சைப் பிரிவுகள் மட்டுமே உள்ளன இந்த நிலை மாறி, ஒவ்வொரு மாவட்டத்திலும், முக்கிய மருத்துவமனைகளிலும் குறைந்தபட்சம் ஒரு பக்கவாத சிகிச்சைப் பிரிவு அமைக்கப்பட வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.
பக்கவாதத்தால் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. இலங்கையில் பதிவாகும் பக்கவாத பாதிப்புகளில் சுமார் 75 சதவீதமானவை மூளைக்குச் செல்லும் இரத்தக் குழாய்களில் அடைப்பு ஏற்படுவதால் உண்டாகும் இஸ்கீமிக் பக்கவாதம் (Ischaemic Stroke) எனப்படும் பாதிப்பாகும்.
தரமான சிகிச்சை
இதற்கிடையில், பக்கவாத நோயாளர்களுக்கு ஆரம்பத்திலேயே உரிய சிகிச்சை வழங்குவதற்குத் தேவையான மருந்துகள், மருத்துவ உபகரணங்கள் மற்றும் சிறப்பு சிகிச்சை வசதிகள் பல மருத்துவமனைகளில் போதுமானதாக இல்லை எனவும் களனி பல்கலைக்கழகத்தின் நரம்பியல் துறை பேராசிரியர் உதய ரணவக்க சுட்டிக்காட்டினார்.

எனவே, இலங்கையில் பக்கவாத சிகிச்சை வசதிகளை விரிவுபடுத்தி, நோயாளர்களுக்கு விரைவான மற்றும் தரமான சிகிச்சை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.
இந்து சமுத்திரம் இனி சீனாவின் கையிலா! 19 மணி நேரம் முன்
ஆங்கிலக்கால்வாயைக் கடக்க புலம்பெயர்வோர் பயன்படுத்தும் படகுகளை விற்பவர் மீது கைது வாரண்ட் News Lankasri