மேலும் வீழ்ச்சியை நோக்கிச் செல்லும் இலங்கை ரூபா! வெளிவந்துள்ள எச்சரிக்கை
கடந்த இரண்டு ஆண்டுகளில் அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி பாரியளவில் வீழ்ச்சியடைந்துள்ளது என்று முன்னாள் அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
ரூபாவின் பெறுமதி
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
தற்போதைய அரசாங்கம் ஆட்சிக்கு வந்தபோது, பணவீக்கம் 0.5 சதவீதமாக இருந்தது. இந்த ஆண்டு ஜூன் மாதத்தில் அது 0.6 சதவீதமாகவும், ஜூலை மாதத்தில் 0.7 சதவீதமாகவும் இருந்தது. கடந்த மாதத்திற்குள் அது 8.5 சதவீதமாக அதிகரித்துள்ளது.
இதனைவிடவும் பணவீக்கம் அதிகரிக்கக்கூடும் என்றும், அது 9 சதவீதத்தையும் தாண்டும் நிலை ஏற்படலாம் என்றும் மத்திய வங்கியின் ஆளுநர் தெரிவித்துள்ளார்.

இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் வரையில் இலங்கை ரூபாவின் பெறுமதி 6.8 சதவீதத்தால் வீழ்ச்சியடைந்துள்ளது. பணவீக்கம் 9 சதவீதத்தை நோக்கி அதிகரித்தால் ரூபாவின் பெறுமதி வீழ்ச்சியடையும் வேகமும் மேலும் அதிகரிக்கக்கூடும்.
கடந்த இரண்டு ஆண்டுகளில் அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி பாரியளவில் வீழ்ச்சியடைந்துள்ளது.
இந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்தபோது ஒரு அமெரிக்க டொலரின் பெறுமதி 292 ரூபாயாக இருந்தது. தற்போது அது 337 ரூபாயாக அதிகரித்துள்ளது. அதாவது, சுமார் 40 ரூபாய் வித்தியாசம் ஏற்பட்டுள்ளது.
இதனால், நாட்டுக்குத் தேவையான உணவு, எரிபொருள், மருந்து உள்ளிட்ட பொருட்களை இறக்குமதி செய்யும் போது ஒவ்வொரு டொலருக்கும் மேலதிகமாக சுமார் 40 ரூபாயைச் செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது என குறிப்பிட்டுள்ளார்.