ஸ்டார்லிங்க் இணைய சேவை ஆரம்பம்
எலோன் மஸ்க்கின் (Elon Musk) ஸ்டார்லிங்க் (Starlink) வலையமைப்பு இலங்கை முழுவதும் ஆரம்பித்து வைக்கப்ட்டுள்ளது.
இதற்கான உத்தியோகபூர்வ அறிவிப்பை எலோன் மஸ்க் தமது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
இணைய சேவைகளை அனுமதிக்கும் திருத்தம்
இலங்கையின் தொலைத்தொடர்பு சட்டத்தில் செயற்கைக்கோள் அடிப்படையிலான இணைய சேவைகளை அனுமதிக்கும் திருத்தத்தைத் தொடர்ந்து, ஆகஸ்ட் 2024 இல் ஸ்டார்லிங்க் ஒழுங்குமுறை ஒப்புதலைப் பெற்றது.
Starlink's high-speed, low-latency internet is now available in Sri Lanka! 🛰️🇱🇰❤️ → https://t.co/Gn2UWiRRqn pic.twitter.com/MeNFa3wNPz
— Starlink (@Starlink) July 2, 2025
இந்நிலையில், கடந்த வாரம், டிஜிட்டல் பொருளாதாரத் துணை அமைச்சர் எரங்க வீரரத்னே, 10 சாதனங்களைப் பயன்படுத்தி ஸ்டார்லிங்க் குறித்த ஒரு முன்னோடித் திட்டம் ஏற்கனவே நடைபெற்று வருவதாகக் கூறினார்.
ஸ்டார்லிங்க் பாரம்பரிய செயற்கைக்கோள் சேவைகளை விட வேகமான இணைய வேகத்தையும் குறைந்த தாமதத்தையும் வழங்குகிறது.
அத்துடன், தரைவழி உட்கட்டமைப்பு குறைவாக உள்ள தொலைதூரப் பகுதிகளில் பயனர்களையும் இணைக்கும் திறனையும் வழங்குகிறது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |