மீண்டும் முதலிடத்தில் எலோன் மஸ்க்
ஃபோர்ப்ஸின் வருடாந்த பில்லியனர்கள் பட்டியலில் உலகின் மிகப் பெரிய பணக்காரர் என்ற தனது இடத்தை எலோன் மஸ்க் மீண்டும் பெற்றுள்ளார்.
ஃபோர்ப்ஸின் 39வது வருடாந்த உலக பில்லியனர்கள் பட்டியலில் 3,028 பில்லியனர்கள் இடம்பெற்றுள்ளனர்.
இது 1987 ஆம் ஆண்டு பட்டியல் தொடங்கப்பட்டதிலிருந்து அதிக எண்ணிக்கையிலான பில்லியனர்களைக் குறிக்கிறது.
மொத்த நிகர மதிப்பு
இந்த ஆண்டு பட்டியலில் 12 இலக்கங்களுக்கு மேல் செல்வம் கொண்ட 15 நபர்கள் இடம்பெற்றுள்ளனர்.
இது முந்தைய ஆண்டை விட அதிகமாகும் என்பதோடு, ஒட்டுமொத்தமாக இந்த பில்லியனர்களின் மொத்த நிகர மதிப்பு 16.1 டிரில்லியன் அமெரிக்க டொலராகும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
டெஸ்லா மற்றும் ஸ்பேஸ் எக்ஸின் தலைமை நிர்வாக அதிகாரியும், எக்ஸ் உரிமையாளருமான எலோன் மஸ்க்கின் நிகர மதிப்பு 75 வீதமாக அதிகரித்து, 342 பில்லியன் அமெரிக்க டொலரை எட்டியுள்ளது.
இவர் 300 பில்லியன் டொலர் செல்வத்தை எட்டிய முதல் நபர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார். இரண்டாவது இடத்தில் மார்க் ஜுக்கர்பெர்க் உம் மூன்றாவது இடத்தில் ஜெஃப் பெசோஸ் உள்ளனர்.
பில் கேட்ஸ் 13ஆவது இடத்திலும் இந்திய பணக்காரர்களான முகேஷ் அம்பானி 18ஆவது இடத்திலும் உள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
