டாடாவின் 3,800 கோடி சொத்து யாருக்கு! வெளியாகிய பத்திர விபரங்கள்
பிரபல தொழிலதிபரும், டாடா அறக்கட்டளைகளின் முன்னாள் தலைவருமான ரத்தன் டாடாவின் சொத்து பத்திரம் தொடர்பான தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன.
ரத்தன் டாடா திருமண வாழ்வை தவிர்த்து வாழ்ந்து வந்ததால், அவரது சொத்து விபரங்கள் யாருக்கு செல்லும் என கேள்வி எழுந்த நிலையில் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.
ரத்தன் டாட்டாவிற்கு இந்தியா மற்றும் வேறு நாடுகளில் அசையும் மற்றும் அசையா சொத்துகள் உட்பட 3,800 கோடி ரூபா சொத்து மதிப்பு உள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது.
டாடாவின் சொத்து பத்திரம்
டாடாவின் சொத்து பத்திரத்தில், அவரது சகோதரரான ஜிம்மி டாடா, ஒன்றுவிட்ட சகோதரிகளான, ஷிரீன் ஜெஜீபாய்(Shireen Jejeebhoy) மற்றும் டீனா ஜீஜீபாய் (Deanna Jejeebhoy), நம்பிக்கைக்குரியவரான மோகினி எம் தத்தா உள்ளிட்ட 24 பெயர்கள் இடம் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.
இதற்கமைய டாடா சன்ஸ் நிறுவனத்தின் தற்போதைய பங்குதாரருக்குத் தவிர, வேறு எவருக்கும் சொத்துக்களை விற்கவோ அல்லது மாற்றவோ முடியாது என்று பத்தித்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மும்பையின் ஜூஹுவில் உள்ள 16கோடி மதிப்புள்ள ஆரம்பர வீடு மற்றும் அவரது நகைகள், சகோதரர் ஜிம்மி டாட்டாவிற்கு(Jimmy tata) செல்லும் என கூறப்பட்டுள்ளது.
பங்கு மற்றும் வீடுகள் தவிர்த்து மீதமுள்ள 800 கோடி மதிப்புள்ள சொத்தில் மூன்றில் ஒரு பங்கு மோகினி மோகன் தத்தாவிற்கு(mohini m dutta) வழங்கப்பட வேண்டும் என கூறப்பட்டுள்ளது.
மற்ற இரு பங்குகள் அவரது இரண்டு ஒன்றுவிட்ட சகோதரிகளான, ஷிரீன் ஜெஜீபாய் மற்றும் டீனா ஜீஜீபாய்க்கு வழங்கப்பட உள்ளது.
உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல்
மேலும், "மூவரில் யாராவது கார், ஓவியம் போன்ற மற்ற சொத்துக்களில் ஏதேனும் ஒன்றை கையகப்படுத்த விரும்பினால், அதன் மதிப்பு மூன்று மதிப்புகளால் தீர்மானிக்கப்பட்டு பொது ஏலத்தில் விடப்பட்டு, அந்த மதிப்பு முறையே ஒவ்வொருவரின் மூன்றில் ஒரு பங்கின் ஒரு பகுதியாக இருக்கும் என்று பத்திரத்தில் கூறப்பட்டுள்ளது.
அவரது நெருங்கிய நண்பரான மெஹ்லி மிஸ்திரி, அலிபாக்கில் உள்ள சொத்தையும், 25 போர் பிஸ்டல் உள்பட டாடாவின் 3 துப்பாக்கிகளையும் பெறுவார் என கூறப்பட்டுள்ளது.
மேலும் தனது செல்லபிராணிகளுக்காக 12 இலட்சம் ஒதுக்கி உள்ளாதாக தெரிவிக்கப்படுகிறது.
அவற்றின் பராமரிப்புக்காக ஒவ்வொரு காலாண்டிலும் 30,000ரூபா வழங்கப்படும் என கூறப்பட்டுள்ளது.
இந்த சொத்து பகிர்வை எதிர்த்து யாராவது நீதிமன்றத்திற்கு சென்றால், இந்த உயிலின் கீழ் அந்த நபருக்கு நான் வழங்கிய சலுகைகள் திரும்ப பெறப்படும் என கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில், இந்த உயிலை நிறைவேற்றுபவர்கள் தற்போது அதை உறுதிப்படுத்த மும்பை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர் என கூறப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
