பல முக்கிய ஆதாரங்களுடன் கைதான சுரேஷ் சலே - பதற்றத்தில் ராஜபக்ஷக்கள்! பலர் அறியாத இரகசியங்கள்
ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் நடைபெற்று 7 வருடங்கள் நிறைவடையவுள்ள நிலையில், முக்கிய திருப்பமாக ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான விசாரணைக்காக தேசிய புலனாய்வு பிரிவின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சாலே கைது செய்யப்பட்டுள்ளார்.
ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்களின் பின்னர் பிள்ளையானின் ஒருங்கிணைப்பாளர் அசாத் மௌலானா வழங்கிய நேர்காணலில் பிள்ளையான், சுரேஷ் சாலே, கோட்டாபய ஆகியோரின் பெயர்களையும் பல விடயங்களையும் பகிரங்கமாக குறிப்பிட்டிருந்தார்.
அதனை தொடர்ந்து ஏன் சுரேஷ் சாலே கைது செய்யப்படவில்லை விசாரணை நடத்தப்படவில்லை என்று கேள்வி எழுப்பப்பட்டது.
தர்கா நகரில் நடந்த தாக்குதல்கள் மற்றும் வவுணத்தீவில் பொலிஸாரை கொலை செய்தமை போன்ற விடயங்களிலும் தேசிய புலனாய்வு பிரிவின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சாலே தலையீடு இருந்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
ராஜபக்சர்களுக்கு மிகவும் நெருங்கிய சுரேஷ் சாலேவிற்கு அவர்களை ஆட்சிபீடம் ஏற்ற வேண்டிய தேவையும் இருந்துள்ளது.
பிள்ளையானுக்கும் மிக நெருக்கமாக இருந்த சுரேஷ் சாலே தற்போது கைது செய்யப்பட்டுள்ளமையானது ராஜபக்சர்களுக்கும் அதிர்ச்சியாக மாறியுள்ளது.
ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்களின் முக்கிய சூத்திரதாரி யார், அவர் கைது செய்யப்படுவாரா என்ற கேள்வி எழும்பியுள்ளது.
இவ்வாறு ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்களின் ஆரம்பம் முதல் நடந்த பலருக்கும் தெரியாத விடயங்களை தாங்கி வருகின்றது News Insight தமிழ் நிகழ்ச்சி...
பாண்டி திருமண பிரச்சனையில் நிலா சோழனுடன் வாழ்வது குறித்து எடுத்த அதிரடி முடிவு... அய்யனார் துணை பரபரப்பு புரொமோ Cineulagam