ரஷ்யப் படைகளின் அட்டூழியம் - இலங்கை தமிழர்களின் திகில் அனுபவம்
உக்ரைன் படையினரால் அண்மையில் மீட்கப்பட்ட ஏழு இலங்கையர்களும் ரஷ்யப் படைகளின் காவலில் கடுமையான சித்திரவதைகளுக்கு உள்ளானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மே மாதம் ரஷ்யப் படைகளால் சிறைபிடிக்கப்பட்ட ஏழு இலங்கையர்களில் திலுஜன் பத்தினஜகனும் ஒருவர். இந்நிலையில், திலுஜன் பத்தினஜகன் வெளிநாட்டு ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில், "நாங்கள் உயிருடன் வெளியே வரமாட்டோம் என்று நினைத்தோம்" என குறிப்பிட்டுள்ளார்.
ரஷ்ய ராணுவம் ஆக்கிரமித்த போது தான் வசித்து வந்த வடகிழக்கு உக்ரைனில் உள்ள குப்ன்ஸ்கில் இருந்து 75 மைல் தொலைவில் உள்ள கிர்கிவ் பகுதிக்கு பாதுகாப்புக்காக வந்து கொண்டிருந்த போது ரஷ்ய படைகளால் பிடிபட்டதாக அவர் வெளிப்படுத்தியுள்ளார்.
இலங்கையர்கள் கண்கள் கட்டப்பட்டு, கைகள் கட்டப்பட்டு, ரஷ்ய எல்லைக்கு அருகில் உள்ள வோவ்சான்ஸ்க் நகரில் உள்ள இயந்திர கருவி தொழிற்சாலைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அந்தக் குழுவின் உக்ரைனுக்கு வேலை தேடி அல்லது படிப்பதற்காக வந்திருந்திருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
குளிக்கச் செல்லும் போது அடித்த படையினர்
அவர்கள் கைதிகளாக, மிகக் குறைந்த உணவில் உயிர்வாழ்ந்துள்ளனர். ஒரு நாளைக்கு ஒரு முறை இரண்டு நிமிடங்களுக்கு மட்டுமே கழிப்பறையைப் பயன்படுத்த அனுமதிக்கப்பட்டனர். அவர்கள் குளிக்க அனுமதிக்கப்பட்ட சந்தர்ப்பங்களில் இரண்டு நிமிடங்கள் மட்டுமே வழங்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த குழுவில் இருந்த ஆறு ஆண்கள் 20 வயதிற்குட்பட்டவர்கள். அனைவரும் ஒரே அறையில் தங்க வைக்கப்பட்டனர். குழுவில் இருந்த ஒரே பெண்ணான 50 வயதான மேரி எடிட் உதஜ்குமார் தனியே வைக்கப்பட்டிருந்தார். "அவர்கள் எங்களை ஒரு அறையில் பூட்டிவிட்டார்கள்," என அந்த பெண் குறிப்பிட்டுள்ளார்.
"நாங்கள் குளிக்கச் செல்லும் போது அவர்கள் எங்களை அடிப்பார்கள், மற்றவர்களைச் சந்திக்க அவர்கள் என்னை அனுமதிக்கவில்லை, நாங்கள் மூன்று மாதங்கள் அடைக்கப்பட்டோம்." என குறிப்பிட்டுள்ளார்.
மேரி, ஏற்கனவே இலங்கையில் கார் வெடிகுண்டு தாக்குதலால் முகத்தில் காயம் ஏற்பட்டுள்ளது, அவருக்கு இதய நோய் உள்ளது, ஆனால் அதற்கான மருந்து எதுவும் கிடைக்கவில்லை. ஆனால் தனிமையின் தாக்கம் உண்மையில் அதன் பாதிப்பை ஏற்படுத்தியது.
"தனியாக இருந்ததால், நான் மிகவும் பதட்டமாக இருந்தேன்," என்று அவர் கூறுகிறார். "எனக்கு மனநலப் பிரச்சினைகள் இருப்பதாக அவர்கள் கூறி, மாத்திரைகள் கொடுத்தனர். ஆனால் நான் அவற்றை எடுத்துக் கொள்ளவில்லை." என குறிப்பிட்டுள்ளார்.
துப்பாக்கியால் உடல் முழுவதும் பலமுறை தாக்கினர்
ஆண்களில் இருவருக்கு கால் நகங்கள் பிடுங்கியெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. எந்தவொரு வெளிப்படையான காரணமும் இல்லாமல் அடிக்கப்படுவதைப் பற்றியும் குழுவினர் பேசியுள்ளனர். ரஷ்ய வீரர்கள் குடித்துவிட்டு பின்னர் அவர்களைத் தாக்குவார்கள்.
35 வயதான தினேஷ் கோகேந்திரன் கூறுகையில், “என்னை அவர்கள் துப்பாக்கியால் உடல் முழுவதும் பலமுறை தாக்கினர். "அவர்களில் ஒருவர் என் வயிற்றில் அடித்தார், நான் இரண்டு நாட்களாக வலியுடன் இருந்தேன், அவர் என்னிடம் பணம் கேட்டார்."
"நாங்கள் மிகவும் கோபமாகவும் சோகமாகவும் இருந்தோம் - நாங்கள் ஒவ்வொரு நாளும் அழுதோம்" என்று 25 வயதான டிலுக்ஷன் ராபர்ட்கிளைவ் தெரிவித்துள்ளார். நாங்கள் தொடர்ந்து செய்த ஒரே விஷயம் பிரார்த்தனை மட்டுமே என அவர் குறிப்பிட்டுள்ளார்.
எவ்வாறாயினும், பொது மக்கள் இலக்கு வைக்கப்பட்டதையும், போர் குற்றச்சாட்டுகளையும் ரஷ்யா தொடர்ந்து மறுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
மனைவியையும் மகளையும் பார்த்த கணம் அழுத நபர்
இந்த மாத தொடக்கத்தில் உக்ரேனிய இராணுவம் கிழக்கு உக்ரைனில் வோவ்சான்ஸ்க் உட்பட பகுதிகளை மீள கைப்பற்ற ஆரம்பித்தபோது ஏழு இலங்கையர்களுக்கான சுதந்திரம் இறுதியாக கிடைத்தது. மீண்டும், குழு கார்கிவ் நோக்கி நடைபயணத்தைத் தொடங்க முடிந்தது.
தனியாகவும், தொலைபேசிகள் இல்லாமலும், அவர்களது குடும்பத்தினரை தொடர்பு கொள்ள அவர்களுக்கு வழி இல்லை. ஆனால் இறுதியாக, அவர்களின் அதிர்ஷ்டம் கிடைத்தது. வழியில் யாரோ ஒருவர் அவர்களைக் கண்டுபிடித்து காவல்துறையை அழைத்தார். ஒரு அதிகாரி அவர்களுக்கு தொலைபேசியை வழங்கினார்.
40 வயதான ஐங்கரநாதன் கணேசமூர்த்தி தனது மனைவியையும் மகளையும் அலைபேசி திரையில் பார்த்த கணம் கண்ணீர் விட்டு அழுதார். மற்றவர்களின் அழைப்புகளும் தொடர்ந்தன.
இப்போது நான் மிகவும் மகிழ்ச்சியாக உணர்கிறேன்," என்று திலுக்ஷன் புன்னகையுடன் கூறுகிறார்.