ரஷ்ய படைகளிடம் இருந்து மீட்கப்பட்ட இலங்கை மாணவர்களின் தற்போதைய நிலை:உக்ரைன் ஜனாதிபதி தகவல்
உக்ரைனின் கார்கிவ் பகுதியில் பொதுமக்கள் அடைத்து வைக்கப்பட்டிருந்த சித்திரவதை அறைகளில் இருந்து மீட்கப்பட்ட ஏழு இலங்கை மாணவர்கள் தொடர்பில் துரித நடவடிக்கைகள் எடுக்கப்படும் என புதுடில்லியில் உள்ள உக்ரைன் தூதரகம் தெரிவித்துள்ளது.
குறித்த மாணவர்கள் தொடர்பான மேலதிக தகவல்கள் சேகரிக்கப்பட்டு வருவதாகவும் தூதரகம் தெரிவித்துள்ளது.
உக்ரைன் ஜனாதிபதியின் அறிவிப்பு
குப்யான்ஸ்க் மருத்துவக் கல்லூரியில் பயின்று வந்த ஏழு இலங்கை மாணவர்கள், கட்டிடம் ஒன்றின் அடித்தளத்தில் இருந்து மீட்கப்பட்டதாக உக்ரைன் ஜனாதிபதி முன்னதாக அறிவித்திருந்தார்.
மாணவர்கள் கடந்த மார்ச் மாதம் முதல் அந்த குதியில் தடுத்து
வைக்கப்பட்டிருந்தனர்.
தற்போது மீட்கப்பட்ட மாணவர்கள் மருத்துவ கவனிப்புக்கு
அனுப்பப்பட்டுள்ளனர் என்றும் உக்ரைன் ஜனாதிபதி செலென்ஸ்கி தெரிவித்திருந்தார்.