காகிவ் பகுதியில் சிக்கியிருந்த ஏழு இலங்கையர்கள் மீட்பு - உக்ரைன் ஜனாதிபதி அறிவிப்பு
ரஷ்யாவின் பிடியில் இருந்து விடுவிக்கப்பட்ட காகிவ் பகுதியில் சிக்கியிருந்த ஏழு இலங்கையர்கள் மீட்கப்பட்டதாக உக்ரைன் ஜனாதிபதி வொலோடிமிர் ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.
காணொளி தொழில்நுட்பத்தின் ஊடாக அறிக்கை ஒன்றின் ஊடாக ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.
கடந்த மார்ச் மாதம் முதல் குறித்த இலங்கையர்கள் அந்த பிராந்தியத்தில் சிறை வைக்கப்பட்டுள்ளனர் என்று அவர் தெரிவித்துள்ளார்.
இலங்கையர்கள் மீட்பு
Kupyansk மருத்துவக் கல்லூரியில் கல்வி கற்கும் 7 இலங்கை மாணவர்ளே காப்பாற்றப்பட்டனர். குறித்த மாணவர்கள் கடந்த மார்ச் மாதம், ரஷ்ய இராணுவத்தால் சிறைப்பிடிக்கப்பட்ட நிலையில் அடித்தளம் சிறை வைக்கப்பட்டனர்.
ரஷ்யாவின் கட்டுப்பாட்டில் இருந்த கார்கிவ் நகரை உக்ரேன் படைகள் மீண்டும் கைப்பற்றியுள்ளனர். இந்நிலையில் அங்கு சிக்கியிருந்த மக்கள் மீட்கப்பட்டுள்ளதாக, ஜனாதிபதி வொலோடிமிர் ஜெலென்ஸ்கி குறிப்பிட்டுள்ளார்.

சர்வதேச அரசியலில் ஈழத் தமிழர்களின் பயணப்பாதை 3 நாட்கள் முன்

viral video: நபரொருவரின் சப்பாத்தை பதம் பார்த்த ராஜ பழுப்பு பாம்பு... மெய்சிலிர்கும் காட்சி! Manithan

வெளிநாட்டவர்களில் சிலரது பாஸ்போர்ட்களை ரத்து செய்யும் வகையில் சட்டத்தில் மாற்றங்கள்: ஜேர்மனி திட்டம் News Lankasri
