திருடர்களைப் பாதுகாத்துவரும் இலங்கை அரசியல்: சஜித் காட்டம்
நாட்டையே வங்குரோத்தாக்கிய நாசகார குடும்ப ஆட்சியின் துணையுடன் என்றுமே அடைய முடியாத நாற்காலியில் ஏறி ஒருவர் திருடர்களைப் பாதுகாத்து வருகின்றனர் என ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
இக்கட்டான காலத்தில் நாட்டைப் பொறுப்பேற்று, நாட்டைச் சரியான பாதையில் திருப்பியதாகச் சிலர் கூறுகின்றனர்.
ஆனால், அவ்வாறு கூறுபவர்களே நாட்டை நாசமாக்கி வருகின்றனர் எனவும் கூறியுள்ளார். தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,
“ஐக்கிய மக்கள் சக்திக்கும் இந்நாட்டை நாசமாக்கிய ராஜபக்சக்களுடன் எந்த டீலும் இல்லை.
சட்ட நடவடிக்கை
ஐக்கிய மக்கள் சக்தியின் புத்திஜீவிகள் ஒன்றியத்தினர், ஐக்கிய மக்கள் சக்தியின் சட்டத்தரணிகள் குழாத்தினர் எடுத்த நடவடிக்கையால் நாட்டை அழித்தது யார் என்பதை இன்றளவில் உயர் நீதிமன்றத்தின் மூலம் வெளிக்கொணர்நதுள்ளனர்.
பொய்யான கோப்புக் கட்டுகளை எடுத்துக்கொண்டு திருடர்களைப் பிடிப்பதற்கு அதிகாரம் கேட்க வேண்டிய அவசியமில்லை.
ராஜபக்ச குடும்பத்தை வெல்ல வைக்க நாம் ஒருபோதும் வீடு வீடாகச் சென்று வாக்குக் கேட்கவில்லை. நாட்டை அழித்த குடும்பத்திற்காக மேடைகளில் ஏறி உரைகளை நிகழ்த்தவில்லை.
76 வருட வரலாறு
ஆட்சிக்கு கொண்டு வந்து நாட்டை அழித்த வாய்ச் சொல் தலைவர்கள் தான் இன்று இவ்வாறு 76 வருட வரலாறு குறித்து பேசுகின்றனர்.
விவசாய அமைச்சர்களாகவும், மீன்பிடி அமைச்சர்களாகவும், கலாசார அமைச்சர்களாகவும் செயற்பட்டு, ராஜபக்ஷக்களின் கைக்கூலிகளாக நாட்டை வங்குரோத்து நிலைக்குத் தள்ளியமைக்கு இவர்களும் துணைபோனார்கள். நாட்டில் நிலவும் அரசியல் கலாசாரத்திற்கு முற்றுப்புள்ளி வைத்து, எம்மிடமுள்ள குறைபாடுகளைக் களைந்து, உகந்த, உன்னத, தூய்மையான ஆட்சியை நோக்கி நாம் செல்வோம். என்றார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |