சர்வதேச கடற்பரப்பில் இலங்கை கடற்படையினரால் 7 பேர் கைது
இலங்கையின் தெற்கே தென்துறை (Dondra) கடற்பரப்பில் மேற்கொள்ளப்பட்ட விசேட நடவடிக்கையின் போது, ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப்பொருட்களை கடத்திச்சென்றதாக சந்தேகிக்கப்படும் படகொன்று இலங்கை கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
இதன்போது படகிலிருந்து 7 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கை
கைது செய்யப்பட்டவர்கள் படகுடன் கரைக்கு அழைத்து வரப்படுவதுடன், மேலதிக விசாரணைகளுக்காக பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவிடம் ஒப்படைக்கப்படவுள்ளனர்.

‘நாடு ஒன்றிணைந்து’ போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டதிலிருந்து, இதுவரை ரூ.116 பில்லியனுக்கும் அதிக பெறுமதியான போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது.
மேலும், 2026 ஜனவரி முதல் இதுவரை 66 படகுகள் கைப்பற்றப்பட்டுள்ளதுடன், 379 சந்தேகநபர்கள் சட்ட நடவடிக்கைகளுக்காக ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
இந்து சமுத்திரம் இனி சீனாவின் கையிலா! 17 மணி நேரம் முன்
அந்த நாட்டில் வாய்ப்புகள் கொட்டிக்கிடக்கின்றன... நாடொன்றின் பக்கம் கவனத்தைத் திருப்பும் ஜேர்மனி News Lankasri