தனியார் வங்கி கணக்கிலிருந்து இலட்சக்கணக்கில் பணமோசடி! முக்கிய அதிகாரி அதிரடியாக கைது
தனியார் வங்கியொன்றின் அதிகாரப்பூர்வ இணையதளத்தை போன்ற ஒரு இணையதளத்தை உருவாக்கி, தனிநபரின் வங்கி கணக்கிலிருந்து 10 இலட்சம் ரூபாய் மோசடி செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
வாரியபொல கணினி குற்றப்புலனாய்வு பிரிவுக்கு கிடைத்த முறைப்பாட்டினை தொடர்ந்து இது தொடர்பாக விசாரணைகள் தொடங்கப்பட்டுள்ளன.
இளைஞர் கைது
சம்பந்தப்பட்ட வங்கியின் அதிகாரப்பூர்வ இணையதளத்தை போன்ற ஒரு இணையதளத்தை உருவாக்கி, ஒரு தனிநபரின் கணக்கு உள்நுழைவு விபரங்களை பெற்று, அவரது வங்கி கணக்கிலிருந்து பணமோசடி செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
இந்த விசாரணையின் போது கிடைத்த தகவல்களின் அடிப்படையில், இந்த மோசடியில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் ஒரு தனியார் நிறுவனத்தின் தரவு உள்ளீட்டு அதிகாரி நேற்று (26) பிற்பகல் கைது செய்யப்பட்டுள்ளார்.
ராகமவை சேர்ந்த 25 வயது இளைஞரே கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
சிறையில் இருக்கும் ஆபத்தான நபரை 68 முறை அழைத்த அரசியல் பிரமுகர்! வாக்குமூலத்தில் வெளியான பெயர்ப்பட்டியல்
இந்து சமுத்திரம் இனி சீனாவின் கையிலா! 16 மணி நேரம் முன்
ஆங்கிலக்கால்வாயைக் கடக்க புலம்பெயர்வோர் பயன்படுத்தும் படகுகளை விற்பவர் மீது கைது வாரண்ட் News Lankasri
அந்த நாட்டில் வாய்ப்புகள் கொட்டிக்கிடக்கின்றன... நாடொன்றின் பக்கம் கவனத்தைத் திருப்பும் ஜேர்மனி News Lankasri