இலங்கையின் மிகப்பெரிய பணக்காரர்களின் திட்டம்! தயார் நிலையில் விமானங்கள்
இலங்கையின் மிகப்பெரிய அரிசி ஆலை உரிமையாளர்கள் விமானங்களை வாங்கத் திட்டமிட்டுள்ளதாக எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்றையதினம் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
நான் கோட் மற்றும்ட டை அணிந்திருந்தாலும் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை நன்கு அறிவேன் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
தயார் நிலையில் விமானங்கள்
“இன்று என்ன நடக்கின்றது என்றால், இலங்கையில் மிகப்பெரிய வர்த்தகர்கள், அரிசி ஆலை உரிமையளார்கள் விமானத்தினை கொள்வனவு செய்து வருகின்றனர்.

பல ஆலை உரிமையாளர்கள் விமானங்களை கொள்வனவு செய்வதற்கு தயாராகி வருகின்றனர் அவர்கள் கொள்வனவு செய்வதற்கு விமானங்கள் தயார் நிலையில் இருக்கும் அதே நேரம் ஏழை விவசாயிகளால் மிதிவண்டியைக் கூட வாங்க முடியாது என்பதுதான் இன்றைய நிலைமை” என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
நாட்டின் இந்த நிலையை சிங்கள நாளிதழ் ஒன்று தெளிவாக சுட்டிக்காட்டியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
சிந்தாமணியிடம் சிக்கப்போகும் சத்யா, க்ரிஷ் விஷயத்தில் அண்ணாமலை முடிவு... சிறகடிக்க ஆசை எபிசோட் Cineulagam
மீனாவுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த முத்து.. ரோகிணியுடன் மீண்டும் இணைந்துவிட்ட மனோஜ்.. சிறகடிக்க ஆசை சீரியல் Cineulagam