முருத்தெட்டுவே ஆனந்த தேரரிடம் ஜனாதிபதி அநுர என்ன பேசினார்? தேரர் உடைத்த இரகசியங்கள்...
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தனக்கு தொலைபேசியில் கதைத்ததாக முருத்தெட்டுவே ஆனந்த தேரர் தெரிவித்துள்ளார்.
நாளை வெள்ளிக்கிழமை (20.02.2026) நடைபெறவுள்ள மகா சங்க மாநாடு தொடர்பில் நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் உரையாற்றும் போதே இதனை குறிப்பிட்டிருந்தார்.
ஜனாதிபதி என்னை தொடர்புகொண்டு, ‘ஹாமுதுருவனே, என்னையும் திட்டுகிறார்கள்’ என்றார். அதற்கு நான், ‘உங்களை திட்டினால் எனக்கு பிரச்சினையில்லை’ என்று கூறினேன். இந்தக் கூட்டத்திற்கும் வருமாறு அவரை நான் அழைத்தேன்.
ஜனாதிபதிக்கு தேரர் கூறிய அறிவுரை
மேலும் ஜனாதிபதியிடம், உங்கள் அருகில் இருக்கும் சில கபடர்களிடம் எச்சரிக்கையாக இருங்கள். அவர்கள் உங்களை தவறான பாதைக்கு இட்டுச் செல்லக்கூடும்.
இந்த அரசை முன்னெடுத்து செல்ல விருப்பமிருந்தால், உங்களைச் சுற்றியுள்ள வதந்தி பரப்பும் கபடர்களை ஒதுக்கி வையுங்கள் என்றும் நான் தெரிவித்தேன்.

தொடர்ந்து பேசிய அவர், மகா சங்க மாநாடு அரசியல் நோக்கத்திற்காக நடத்தப்படுவது அல்ல.இந்த மாநாட்டின் முக்கிய நோக்கம் நாடு, இனம், மதம் ஆகியவற்றை பாதுகாப்பதற்காகவாகும்.
நாமல் அல்லது சஜித் ஆகியோருக்கு ஆட்சி அதிகாரம் வழங்கவோ அல்லது ராஜபக்ச அணியை உருவாக்கி நாட்டை கலவரப்படுத்த எந்த முயற்சியும் மேற்கொள்ளப்படவில்லை.

இது குறித்து சமூக வலைத்தளங்களில் தவறான பிரசாரம் நடைபெறுகிறது. இந்த நாட்டில் பிக்குகளின் பாரம்பரியம், எமது பண்பாட்டை அரசு பாதுகாக்க வேண்டும்.
அதுவே எங்களின் எதிர்பார்ப்பும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
தமிழர் விட்டுக்கொடுப்பு அரசியலும் சிங்கள பௌத்த அரசியல் 8 மணி நேரம் முன்
ஜனநாயகன் திரைப்படத்தில் இத்தனை காட்சிகள் நீக்கப்படுகிறதா? வெளிவந்த தகவலால் ரசிகர்கள் அதிர்ச்சி Cineulagam
ஹார்முஸ் நீரிணையில் புதிய சேவை கட்டணம்: நட்பு நாடுகளுக்கு சிறப்பு சலுகை வழங்கும் ஈரான் News Lankasri