தென் ஆபிரிக்காவில் திடீர் தங்க வேட்டை : கால்நடைப் பண்ணையில் குவிந்த மக்கள்
தென் ஆபிரிக்காவின் ஜோகன்னஸ்பர்க் நகருக்கு கிழக்கே உள்ள ஸ்பிரிங்ஸ் என்ற பகுதியில் உள்ள ஒரு சிறிய கால்நடைப் பண்ணையில் தங்கம் கண்டறியப்பட்டதாகப் பரவிய செய்தியைத் தொடர்ந்து, நூற்றுக்கணக்கான மக்கள் அங்கு குவிந்து வருகின்றனர்.
சில நாட்களுக்கு முன்பு, குகுலேத்து (Gugulethu) குடியிருப்புப் பகுதியில் உள்ள ஒரு மாட்டுப் பண்ணையில் வேலி அமைப்பதற்காகக் குழி தோண்டியபோது, மண்ணில் தங்கத் துகள்கள் இருப்பது கண்டறியப்பட்டது.
தங்க வேட்டை
இந்தச் செய்தி சமூக ஊடகங்களில் காட்டுத்தீயாகப் பரவியதால், அக்கம்பக்கத்துப் பகுதிகளில் இருந்தும் மக்கள் மண்வெட்டி மற்றும் கடப்பாரைகளுடன் அந்தப் பண்ணையில் குவியத் தொடங்கினர்.

பண்ணையாக இருந்த அந்தப் பகுதி தற்போது ஆயிரக்கணக்கான குழிகளுடன் ஒரு சுரங்கம் போலக் காட்சியளிக்கிறது. பாடசாலை மாணவர்கள் கூட தங்கள் சீருடையை மாற்றிவிட்டுத் தங்கம் தேடும் பணியில் ஈடுபடுவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தத் தங்க வேட்டை சட்டவிரோதமானது என்று தென் ஆபிரிக்காவின் கனிம வளத் துறை எச்சரித்துள்ளது. முறையான அனுமதி இன்றிச் செய்யப்படும் இந்த அகழ்வு சுற்றுச்சூழலுக்குப் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்று அரசு கூறியுள்ளது.
நிலப்பகுதி உறுதியற்றதாக இருப்பதால், எந்த நேரத்திலும் மண் சரிவு ஏற்பட்டு உயிர்ச்சேதம் ஏற்பட வாய்ப்புள்ளதாக அதிகாரிகள் அச்சம் தெரிவிக்கின்றனர்.

மண்ணில் இருந்து தங்கத்தைப் பிரித்தெடுக்கப் பாதரசம் (Mercury) மற்றும் சோடியம் சயனைடு போன்ற ஆபத்தான வேதிப்பொருட்கள் பயன்படுத்தப்படுவது அப்பகுதி மக்களின் ஆரோக்கியத்திற்குப் பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ளது.
தென் ஆபிரிக்காவில் வேலையில்லாத் திண்டாட்டம் 32% வரை உயர்ந்துள்ள நிலையில், ஒரு கிராம் தங்கம் சுமார் 100 டொலர் வரை விற்கப்படுவதால், வறுமையில் வாடும் மக்கள் இத்தகைய ஆபத்தான செயல்களில் ஈடுபடுகின்றனர். "குற்றச்செயல்களில் ஈடுபடுவதை விட, இது எங்களைக் காப்பாற்றுகிறது" என்று அங்கு தங்கம் தேடும் மக்கள் கூறுகின்றனர்.
ரஷ்யா, சீனா மற்றும் ஈரான் கூட்டு ராணுவப் பயிற்சி: போர்க்கப்பல்களுடன் களமிறங்கிய முன்னணி நாடுகள் News Lankasri
கெத்தாக வீட்டிற்குள் வந்த ஜனனி, குணசேகரன் சொன்ன விஷயம்... எதிர்நீச்சல் தொடர்கிறது ஸ்பெஷல் புரொமோ Cineulagam
நிலா-சோழனுக்கு கிடைத்த உயில், ஆனால் அதில் இருந்தது என்ன தெரியுமா?... அய்யனார் துணை எபிசோட் Cineulagam