திடீரென ஏற்பட்ட தடை! லண்டனில் இருந்து கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு அவசர அறிவிப்பு
இலங்கையின் குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தினால் வழங்கப்படும் மின்னணு பயண அனுமதி (ETA) அறிவிப்புகளை விநியோகிப்பதில் தற்காலிக சேவைத் தடங்கல் ஏற்பட்டுள்ளது.
இந்த தகவலை லண்டனிலுள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயத்தின் கொன்சியூலர் பிரிவினால் வெளியிடப்பட்டுள்ள இந்த அறிவிப்பில் இவ்விடயங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.
எதிர்பாராத தொழில்நுட்பக் கோளாறுகள் காரணமாகவே இந்தச் சேவைத் தடங்கல் ஏற்பட்டுள்ளதாகவும் இதன்போது சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
மேலும், இலங்கையிலுள்ள உரிய அதிகாரிகள் இதனை முன்னுரிமை அடிப்படையில் சரிசெய்யும் நடவடிக்கைகளை எடுத்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உத்தியோகபூர்வ அனுமதி அறிவிப்பு
ஏற்கனவே, மின்னணு பயண அனுமதிக்கு விண்ணப்பித்த பயணிகள், தமக்குரிய உத்தியோகபூர்வ அனுமதி அறிவிப்பு கிடைக்காவிட்டாலும் இலங்கைக்குப் பயணிக்க முடியும்.

பயணிகள் விமானத்தில் ஏறுவதற்கு மின்னணு பயண அனுமதி அறிவிப்பைச் சமர்ப்பிப்பதிலிருந்து விலக்களிக்குமாறு அனைத்து விமான நிறுவனங்களுக்கும் மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கும் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பயணிகள் இலங்கை பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்ததும், அவர்களது மின்னணு பயண அனுமதி சரிபார்ப்பு மற்றும் தேவையான ஏனைய வசதிகள் அங்குள்ள அதிகாரிகளினால் செய்து கொடுக்கப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன், குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களம் நிலைமையை விரைவில் சீர்செய்ய நடவடிக்கை எடுத்து வருவதாகவும், இதனால் ஏற்படும் அசௌகரியங்களுக்கு வருத்தம் தெரிவிப்பதாகவும் அந்த அறிவிப்பில் மேலும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
ரஷ்யா, சீனா மற்றும் ஈரான் கூட்டு ராணுவப் பயிற்சி: போர்க்கப்பல்களுடன் களமிறங்கிய முன்னணி நாடுகள் News Lankasri
நிலா-சோழனுக்கு கிடைத்த உயில், ஆனால் அதில் இருந்தது என்ன தெரியுமா?... அய்யனார் துணை எபிசோட் Cineulagam