அடுத்த அரகலய இரத்த வெள்ளம்தான்: சந்திரிகா அம்மையார் எச்சரிக்கை

Chandrika Kumaratunga Keheliya Rambukwella Ranil Wickremesinghe SL Protest
By Rakesh Sep 08, 2023 01:55 PM GMT
Report

அடுத்த அரகலய நிம்மதியாக இருக்காது. அது இரத்த வெள்ளமாக இருக்கும். மக்களின் கோபத்தைக் குறைத்து மதிப்பிடாதீர்கள் இவ்வாறு அரசுக்கு எச்சரிக்கை விடுத்தார் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க.

சிங்களத் தொலைக்காட்சியொன்றுக்கு வழங்கிய நேர்காணலிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில்,

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் சப்பாத்தாக நான் இருந்திருந்தால்கூட பொதுத் தேர்தலுக்கு உத்தரவிட்டிருப்பேன். தோல்விப் பயம் காரணமாக ரணில் விக்ரமசிங்க தேர்தலுக்குச் செல்லவில்லை.

சுகாதார அமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை தோற்கடிப்பு

சுகாதார அமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை தோற்கடிப்பு

நாட்டின் வீழ்ச்சியை ரணில் விக்ரமசிங்கவால் விரைவாகத் தடுத்து நிறுத்த முடிந்தது. ஆனால், ஊழல் அரசியல்வாதிகளுடன் இணைந்து பணியாற்றியதால் அவரால் முன்னேற முடியவில்லை.

கெஹலியவை உடன் கைது செய்யவேண்டும்

ஊழல் குடும்பத்தைச் சேர்ந்தவர்களே அரசில் உள்ளார்கள். ரணில் திருடுகின்றார் என்று நான் நினைக்கவில்லை. ஆனால், அவரைச் சுற்றியுள்ள அனைவரும் திருடுகின்றார்கள். உதாரணத்துக்குச் சுகாதார அமைச்சரைப் பாருங்கள். அவரின் அமைச்சில் ஊழல், மோசடி இடம்பெற்றுள்ளது.

அடுத்த அரகலய இரத்த வெள்ளம்தான்: சந்திரிகா அம்மையார் எச்சரிக்கை | Sri Lanka Protest 2022

இறக்குமதி செய்யப்பட்ட தரமற்ற மருந்துகளால் மக்கள் இறந்துள்ளார்கள் என்பது அனைவருக்கும் தெரியும். சுகாதார அமைச்சர்  கெஹலிய ரம்புக்வெலவை உடனடியாகக் கைது செய்ய வேண்டும்.

அவரை அமைச்சுப் பதவியில் இருந்து மட்டுமல்லாமல் நாடாளுமன்றத்திலிருந்தும் அகற்ற வேண்டும். அவருக்கு எதிராக எதிர்க்கட்சிகள் வலுவான பிரேரணைகளைக் கொண்டு வர வேண்டும்.

ஊழல், மோசடியே நாட்டைப் பின்னுக்குத் தள்ளும். இவ்வாறான ஊழல், மோசடி வஞ்சகர்கள் அதிகாரத்தில் உள்ளார்கள்.

மக்கள் கோபமாக இருக்கின்றார்கள். கோட்டாபய ராஜபக்சவின் விலகலுக்குப் பின்னர் அவர்கள் எதிர்பார்த்தது நிறைவேறவில்லை. அடுத்த அரகலய நிம்மதியாக இருக்காது. அது இரத்த வெள்ளமாக இருக்கும். மக்களின் கோபத்தைக் குறைத்து மதிப்பிடாதீர்கள்  என்றார்.

என்னை முடக்கும் சதித் திட்டம் படுதோல்வியடையும்: அடித்துக் கூறுகின்றார் கெஹலிய

என்னை முடக்கும் சதித் திட்டம் படுதோல்வியடையும்: அடித்துக் கூறுகின்றார் கெஹலிய

கேவலமான ஒருவரே இந்த நாட்டில் சுகாதார அமைச்சர்: சபையில் சிறிதரன் காட்டம்(Video)

கேவலமான ஒருவரே இந்த நாட்டில் சுகாதார அமைச்சர்: சபையில் சிறிதரன் காட்டம்(Video)

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW


மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
நன்றி நவிலல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
நன்றி நவிலல்
நன்றி நவிலல்

மீசாலை, Toronto, Canada

17 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US