சிறீதரன்-சுமந்திரனுக்கு இடையில் தீர்க்கப்படாத பிரச்சினை! கம்பவாரதி ஜெயராஜ் விடுத்துள்ள எச்சரிக்கை
சுமந்திரனும் ஸ்ரீதரனும் பிரச்சினைகளை எவ்வளவுக்கெவ்வளவு பிற்போடுகிறார்களோ, அவ்வளவுக்கு அவ்வளவு அப்பிரச்சினை பூதாகரமாகிக் கொண்டே போகும். அல்லது போக வைப்பார்கள் என கம்பவாரதி ஜெயராஜ் தனது உரலார் கேள்வி,உலக்கையார் பதில் என்ற தொகுப்பில் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அந்த தொகுப்பில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது,
உரலார் கேள்வி :- சுமந்திரனும் ஸ்ரீதரனும் தமக்குள் பேசி பிரச்சினைகளைத் தீர்ப்பார்கள் என்று நினைக்கிறீர்களா?
உலக்கையார் பதில் :- அது அவர்களுக்குத்தான் தெரியும்.ஆனால் ஒன்று! தீர்ப்பது என்று உண்மையிலேயே முடிவு செய்வார்களே ஆனால், எவ்வளவு விரைவில் அக்காரியத்தைச் செய்யமுடிமோ அவ்வளவு விரைவில் அதனைச் செய்து முடிக்க வேண்டும்.
பிரச்சினைகள்
பிரச்சினைகளை எவ்வளவுக்கெவ்வளவு பிற்போடுகிறார்களோ, அவ்வளவுக்கு அவ்வளவு அப்பிரச்சினை பூதாகரமாகிக் கொண்டே போகும். அல்லது போக வைப்பார்கள்.

இப்போது பிரச்சினை என்கிற மாட்டின் மூக்கணாங்கயிறு இவ்விருவர் கையிலும் இருக்கிறது.
இன்னும் சில நாட்கள் சென்றால் இவ்விருவரது மூக்கணாங்கயிறும் பிரச்சினைகளை வளர்ப்போரின் கைக்கு போய்விடும். அப்போது இவர்கள் நினைத்தாலும் ஒன்றும் செய்யமுடியாது.
சல்லடையார் சலிப்பு - கூட இருக்கும் கும்பிடு சாமிகள், இவர்களை தம் இஷ்டப்படி இயங்க விடுவார்களா?
பிரான்ஸ் அருங்காட்சியக திருட்டில் பயன்படுத்தப்பட்ட கிரேன்., விளம்பரம் செய்த ஜேர்மன் நிறுவனம் News Lankasri