பிரித்ததானிய இளவரசி புற்றுநோயினால் பாதிப்பு
புற்றுநோயின் ஆரம்ப கட்டத்தில் தான் இருப்பதாக பிரித்தானியாவின் இளவரசி கெத்தரின் கூறியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அத்துடன் அதற்கான சிகிச்சைஅவர் கிரமமாக பெற்று வருவதாகவும் கூறப்பட்டுள்ளது.
அவர் வெளியிட்டுள்ள ஒரு காணொளி பதிவில்,
மன்னர் சார்லஸ் வாழ்த்து
இந்த செய்தி பெரிய அதிர்ச்சியாக அமைந்ததாகவும் ,தமது குடும்பத்தினர் நம்பமுடியாத, கடினமான இரண்டு மாதங்களை கழித்ததாகவும் தெரிவித்துள்ளார்.
இந்தநிலையில் கடந்த ஜனவரி மாதம் தனது வயிற்றில் பெரிய அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடந்ததாக அவர் கூறியுள்ளார்.
இந்த பரிசோதனையின் போதே தமக்கு புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டது எனவும் அவர் தெரிவிததுள்ளார்.
A message from Catherine, The Princess of Wales pic.twitter.com/5LQT1qGarK
— The Prince and Princess of Wales (@KensingtonRoyal) March 22, 2024
இதேவேளை ஏற்கனவே புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் மன்னர் சார்லஸ், தனது மருமகளின் துணிச்சலைக் கண்டு மிகவும் பெருமைப்படுவதாக தெரிவித்துள்ளார் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அத்துடன் இங்கிலாந்து பிரதம மந்திரி ரிஷி சுனக் தமது செய்தி பதிவு ஒன்றில், கேட் "மிகப்பெரிய துணிச்சலை" காட்டியுள்ளார் மற்றும் "முழு நாட்டின் அன்பையும் ஆதரவையும்" பெற்றுள்ளார் என்று தெரிவித்துள்ளார்.
The Princess of Wales has the love and support of the whole country. pic.twitter.com/IFX51Wm5Q3
— Rishi Sunak (@RishiSunak) March 22, 2024
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |