உலகப் போரைக் காட்டி அரசு தப்பிக்க முடியாது! முஜிபுர் ரஹ்மான் எம்.பி. சாடல்

Sri Lanka Economic Crisis Sri Lankan Peoples Mujibur Rahman IMF Sri Lanka Sri Lanka Government
By Rakesh Jun 05, 2026 03:28 AM GMT
Report

தற்போது நாட்டில் நிலவும் பொருளாதாரச் சூழல் குறித்து அரசுக்கு முறையான புரிந்துணர்வு உள்ளதா அல்லது இந்த நெருக்கடிகளை அவர்களால் சரியாக நிர்வகிக்க முடிகின்றதா என்ற பலத்த சந்தேகம் எழுந்துள்ளது என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் ஊடகங்களிடம் தெரிவித்தார்.

சர்வதேச நாணய நிதியத்தின் திட்டத்தை மட்டுமே நம்பி அரசு இயங்கி வருகின்றதே தவிர, நாட்டை மீட்டெடுப்பதற்கான மாற்றுத் திட்டங்கள் எதையும் அது முன்வைக்கவில்லை என்றும் அவர் குற்றஞ்சாட்டினார்.

இலங்கையில் பரபரப்பை ஏற்படுத்திய வங்கிக் கொள்ளை - பின்னணியிலுள்ள மர்ம நபர்

இலங்கையில் பரபரப்பை ஏற்படுத்திய வங்கிக் கொள்ளை - பின்னணியிலுள்ள மர்ம நபர்

தேங்கி நிற்கும் இலங்கையின் பொருளாதாரம் 

நாட்டின் பொருளாதாரம் ஒரே இடத்தில் தேங்கி நிற்கும் நிலையை எட்டியுள்ளது என்று குறிப்பிட்ட நாடாளுமன்ற உறுப்பினர், புதிய முதலீட்டாளர்கள் எவரும் நாட்டுக்குள் வரவில்லை என்றும், புதிய திட்டங்கள் எதுவும் ஆரம்பிக்கப்படவில்லை என்றும் சுட்டிக்காட்டினார்.

"தனியார் துறையின் முதலீடுகள் முடங்கியுள்ளதால் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்குவதற்கான சாத்தியக்கூறுகள் இல்லாமல் போயுள்ளன.

உலகப் போரைக் காட்டி அரசு தப்பிக்க முடியாது! முஜிபுர் ரஹ்மான் எம்.பி. சாடல் | Sri Lanka Political Crisis And Economic Crisis

பொதுமக்கள் உணரும் வகையில் எந்தவொரு சாதகமான மாற்றமும் பொருளாதாரத்தில் தெரியவில்லை. மாறாக அரசின் வெற்றுப் பேச்சுக்கள் மட்டுமே இன்னும் தொடர்ந்து கொண்டிருக்கின்றன"  என்றும் அவர் குறிப்பிட்டார்.

நாட்டின் தற்போதைய பொருளாதார வீழ்ச்சிக்கு உலகளாவிய போர்தான் காரணம் என அரசு கூறுவது குறித்துக் கேள்வி எழுப்பிய முஜிபுர் ரஹ்மான், போரினால் உலகில் உள்ள ஒவ்வொரு நாட்டுக்கும் பாதிப்புகள் ஏற்படுவது உண்மைதான் என்றார்.

அமெரிக்கா போன்ற வல்லரசு நாடுகளுக்கும் கூட போரின் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளதைச் சுட்டிக்காட்டிய அவர், உலகளாவிய சூழலைக் காரணம் காட்டி அரசு தனது நிர்வாகத் தோல்விகளில் இருந்து தப்பித்துக்கொள்ள முடியாது என்றும் தெரிவித்தார்.

உலகப் போரைக் காட்டி அரசு தப்பிக்க முடியாது! முஜிபுர் ரஹ்மான் எம்.பி. சாடல் | Sri Lanka Political Crisis And Economic Crisis

உலகில் இவ்வாறானதொரு போர்ச் சூழல் உருவாகப் போகின்றது என்பது குறித்து அரசுக்கு முன்கூட்டியே தெரிந்திருந்தது என்று குறிப்பிட்ட அவர், இதனால்தான் கடந்த ஜனவரி, பெப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களிலேயே வரவிருக்கும் நெருக்கடிகளைச் சரியாக எதிர்கொள்வதற்குத் தேவையான தீர்க்கமான முடிவுகளை எடுக்குமாறு தாங்கள் அரசை வலியுறுத்தியதாகவும் நினைவூட்டினார்.

எனினும், அரசு அதற்குத் தயாராக இருக்கவில்லை என்றும், அவ்வாறு திட்டமிடத் தவறியதன் மோசமான விளைவையே இன்று ஒட்டுமொத்த நாட்டு மக்களும் அனுபவித்து வருகின்றார்கள் என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் ஊடகங்களிடம் மேலும் கூறினார்.

பரீட்சைகள் தொடர்பில் கட்டாயமாகும் புதிய நடைமுறை! பரீட்சைகள் திணைக்களம் அறிவிப்பு

பரீட்சைகள் தொடர்பில் கட்டாயமாகும் புதிய நடைமுறை! பரீட்சைகள் திணைக்களம் அறிவிப்பு

சங்கீதன் கைதினை தொடர்ந்து கமால் குணரட்ண கைது செய்யப்படுவாரா - அநுரவை சூழும் பெரும் நெருக்கடி

சங்கீதன் கைதினை தொடர்ந்து கமால் குணரட்ண கைது செய்யப்படுவாரா - அநுரவை சூழும் பெரும் நெருக்கடி

மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
நன்றி நவிலல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
நன்றி நவிலல்
நன்றி நவிலல்

மீசாலை, Toronto, Canada

17 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
நன்றி நவிலல்

சாவகச்சேரி, Epsom, United Kingdom

18 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, திருநெல்வேலி, Markham, Canada

28 Sep, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Böblingen, Germany

14 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
90வது பிறந்தநாளும் 5ம் ஆண்டு நினைவஞ்சலியும்

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US