கோட்டாபயவால் ஏற்பட்டுள்ள சிக்கல்! தென்னிலங்கை அரசியலில் மீண்டும் குழப்ப நிலை
இலங்கையில் நாளுக்கு நாள் புதுப் புது மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன. சமூக, அரசியல் மற்றும் பொருளாதார ரீதியிலான நகர்வுகள், சர்வதேசம் திரும்பிப் பார்க்கும் வகையிலான அரசியல் மாற்றங்களும் அரங்கேறி வருகின்றன.
இந்த நிலையில் இன்று எமது தளத்தில் அதிகளவான செய்திகளை நாங்கள் பிரசுரித்திருந்தோம். அவற்றுள் நீங்கள் தவறவிட்ட முக்கிய செய்திகளை விசேட தொகுப்பாக உங்களுக்கு தருகின்றோம். நீங்கள் தவறவிட்ட செய்திகளை கட்டாயம் படிக்கவும்.
1 இலங்கை வெளிவிவகார அமைச்சு நீதியமைச்சின் ஆதரவுடன் வெளிநாட்டு ஒருங்கிணைப்பு செயலகமொன்றை உருவாக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது. புலம்பெயர்ந்த தமிழர் சமூகத்துடனான உறவுகளை வலுப்படுத்தும் நோக்கில் வெளிநாட்டில் உள்ள இலங்கையர்களுக்கு சேவையாற்றுவதை நோக்கமாக கொண்டு இந்த அலுவலகத்தை அமைக்கும் நடவடிக்கைகள் இடம்பெறுவதாக தெரிவிக்கப்படுகிறது.
இலங்கையிலிருந்து புலம்பெயர் தமிழர்களுக்கு விரைவில் கிடைக்கப்போகும் செய்தி >>> மேலும்படிக்க
2 வெள்ளவத்தையில் கட்டிடம் ஒன்றில் இருந்து தவறி விழுந்து நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த விபத்து மாயா அவனியு பகுதியில் நேற்று மாலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வெள்ளவத்தையில் நடந்த பரிதாபம் - ஒருவர் உயிரிழப்பு
>>> மேலும்படிக்க
3 எரிபொருள் விநியோகத்தை மேலும் டிஜிட்டல் மயப்படுத்துவது தொடர்பில் மின்சக்தி எரிசக்தி அமைச்சு கூடுதல் கவனம் செலுத்தியுள்ளது. இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம் மற்றும் இலங்கை பெட்ரோலிய களஞ்சியசாலை அதிகாரிகளுக்கும் இடையில் இடம்பெற்ற பேச்சுவார்த்தையின் போது இந்த விடயங்கள் குறித்து கவனம் செலுத்தப்பட்டது.
எரிபொருள் விநியோகத்தில் ஏற்படவுள்ள மாற்றம் >>> மேலும்படிக்க
4 தம்புள்ளையில் வீடொன்றில் நேற்று இரவு பெண் ஒருவர் கூரிய ஆயுதத்தால் கழுத்தை அறுத்து கொலைசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். தம்புள்ளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொட்டவெல கிராமத்தைச் சேர்ந்த 42 வயதான மூன்று பிள்ளைகளின் தாயாரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
வெளிநாட்டில் இருந்து இலங்கை திரும்பிய மனைவியை கொடூரமாக கொலை செய்த கணவன் >>> மேலும்படிக்க
5 எமது நாடு பற்றி எரிந்து கொண்டிருக்கின்றது, அந்தத் தீயை அணைக்க வேண்டிய பொறுப்பு எமக்கு உள்ளது என புதிய ஹெல உறுமயவின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
பற்றி எரிந்து கொண்டிருக்கிறது இலங்கை! விடுக்கப்பட்டுள்ள பகிரங்க அழைப்பு >>> மேலும்படிக்க
6 முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச நாடு திரும்பியமைக்கு எதிராக எவரும் குரல் எழுப்ப முடியாது. அவரைக் கைது செய்யுமாறும் எவரும் அழுத்தம் கொடுக்கவும் முடியாது என்று அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார்.
கோட்டாபயவை கைது செய்ய முடியாது! நாங்கள் கைவிடவும் மாட்டோம் - அமைச்சர் பதிலடி >>> மேலும்படிக்க
7 எதிர்வரும் டிசம்பர் மாதம் 31ஆம் திகதி ஓய்வு பெறும் அரச ஊழியர்களின் எண்ணிக்கை 20,000ஐ தாண்டும் என உள்நாட்டலுவல்கள், மாகாணசபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் எம்.எம்.பி.கே.மாயாதுன்னே தெரிவித்துள்ளார்.
இவ்வருட இறுதியில் வீட்டிற்கு செல்லப்போகும் ஆயிரக்கணக்கான அரச ஊழியர்கள்! வெளியாகியுள்ள தகவல் >>> மேலும்படிக்க
8 பதவியை விட்டு வெளியேறிய முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிற்கு பாதுகாப்பு வழங்குவதற்காக பொலிஸ் பாதுகாப்புப் பிரிவொன்றை அமைப்பதற்கு அமைச்சரவை இன்னும் அனுமதி வழங்கவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.
கோட்டாபயவினால் தென்னிலங்கை அரசியலில் குழப்பம் - பாதுகாப்பில் சிக்கல்
>>> மேலும்படிக்க
9 இலங்கையில் வீடுகளை கொள்வனவு செய்வோருக்கு வழங்கப்படும் சலுகை தொடர்பில் அறிவிப்பொன்று வெளியாகியுள்ளது.
வீடுகளை கொள்வனவு செய்பவர்களுக்கான முக்கிய தகவல்! சலுகை தொடர்பில் வெளியான அறிவிப்பு >>> மேலும்படிக்க
10 2021ஆம் ஆண்டுக்கான சாதாரண தர பரீட்சை தொடர்பில் பரீட்சை திணைக்களம் அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது.
சாதாரண தர பரீட்சை திகதியில் மாற்றம்: வெளியாகியுள்ள அறிவிப்பு>>> மேலும்படிக்க