சாதாரண தர பரீட்சை திகதியில் மாற்றம்: வெளியாகியுள்ள அறிவிப்பு
2021ஆம் ஆண்டுக்கான சாதாரண தர பரீட்சை தொடர்பில் பரீட்சை திணைக்களம் அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது.
2021 சாதாரண தர பரீட்சையின் அழகியல் பாடங்கள் தொடர்பான நடைமுறை பரீட்சைகள் எதிர்வரும் 20 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளதாக பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது.
பரீட்சை திகதியில் மாற்றம்
பரீட்சை ஆணையாளர் நாயகம் எல்.எம்.டி.தர்மசேன இன்று(05) ஊடகவியலாளர் சந்திப்பொன்றை நடத்தியுள்ளார்.
இதன்போது கருத்து தெரிவிக்கையிலேயே குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
மேலும் தெரிவிக்கையில்,“2021 சாதாரண தர பரீட்சையின் நடைமுறைப் பரீட்சைகள் எதிர்வரும் 15 ஆம் திகதி ஆரம்பமாகவிருந்தது.
விடைத்தாள்கள் மதிப்பீடு
இந்நிலையில், தவிர்க்க முடியாத காரணங்களால் அதற்கான பரீட்சைகளை எதிர்வரும் 20 ஆம் திகதி நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.
2021 ஆம் ஆண்டுக்கான பொதுப் பரீட்சைக்கான விடைத்தாள்கள் மதிப்பீடு செய்யும் பணிகள் இந்த நாட்களில் நடைபெற்று வருவதனால், பல பாடங்களின் மதிப்பீடு இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது.
இதன்காரணமாக நடைமுறைப் பரீட்சைகளை நடத்துவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.”என கூறியுள்ளார்.