வெளிநாட்டில் இருந்து இலங்கை திரும்பிய மனைவியை கொடூரமாக கொலை செய்த கணவன்
தம்புள்ளையில் வீடொன்றில் நேற்று இரவு பெண் ஒருவர் கூரிய ஆயுதத்தால் கழுத்தை அறுத்து கொலைசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
தம்புள்ளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொட்டவெல கிராமத்தைச் சேர்ந்த 42 வயதான மூன்று பிள்ளைகளின் தாயாரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
மனைவி கொடூரமாக கொலை
கணவருக்கும், மனைவிக்கும் இடையில் ஏற்பட்ட வாக்குவாதத்தை அடுத்து, கணவரே இந்தக் கொலையைச் செய்துள்ளதாக முதற்கட்ட விசாரணையில் உறுதி செய்யப்பட்டுள்ளது.
கழுத்தை அறுத்துவிட்டு அந்த நபரும் வீட்டை விட்டு வெளியேறியதாகவும், வெளியேறும்போது அவரும் தூக்கிட்டு உயிரை மாய்க்கவுள்ளதாக கூறியதாகவும் பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர்.
கணவன் தப்பியோட்டம்
குறித்த பெண் கடந்த 31ஆம் திகதியே நாடு திரும்பிய நிலையில் இந்த கொலை சம்பவம் இடம்பெற்றுள்ளது
பெண்ணை கொன்றுவிட்டு தப்பியோடிய கணவரை தேடும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை தம்புள்ளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.