அரச ஊழியர்கள் தொடர்பில் வெளியான புதிய அறிவிப்பு
இலங்கையில் நாளுக்கு நாள் புதுப் புது மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றது. சமூக, அரசியல் மற்றும் பொருளாதார ரீதியிலான நகர்வுகள், சர்வதேசம் திரும்பிப் பார்க்கும் வகையிலான அரசியல் மாற்றங்களும் அரங்கேறி வருகின்றன.
இந்த நிலையில் இன்று எமது தளத்தில் அதிகளவான செய்திகளை நாங்கள் பிரசுரித்திருந்தோம். அவற்றுள் நீங்கள் தவறவிட்ட முக்கிய செய்திகளை விசேட தொகுப்பாக உங்களுக்கு தருகின்றோம்.
நீங்கள் தவறவிட்ட செய்திகளை கட்டாயம் படிக்கவும்.
1 தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் உட்பட நான்கு தலைவர்கள் நாட்டில் பிரபுத்துவ அரசியலுக்கு எதிராக குரல் கொடுத்தவர்கள் என முன்னாள் அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க >>>வேலுப்பிள்ளை பிரபாகரன் பிரபுத்துவ அரசியலுக்கு எதிராக போராடினார்!
2 இலங்கையர்கள் அமெரிக்க டொலர் உள்ளிட்ட வெளிநாட்டு நாணயங்களை வர்த்தக வங்கியின் ஊடாக ரூபாவாக மாற்றுவதற்கு பொது மன்னிப்புக் காலத்தை அறிவிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
மேலும் படிக்க >>>நிதி ஆதாரத்தை நிரூபிக்கும் ஆவணம் தேவையில்லை
3 தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு உட்பட காணிப் பிணக்குகள் மற்றும் அரசியல் கைதிகளின் விடுதலை உள்ளிட்ட பிரதான பிரச்சினைகளுக்கான தீர்வுகளும் சர்வ கட்சி அரசொன்றிற்கான பொது வேலைத்திட்டத்தில் உள்வாங்கப்பட வேண்டும் என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
மேலும் படிக்க >>>ஜனாதிபதியின் அழைப்புக்கு அமைச்சர் டக்ளஸின் பதில்
4 முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய அரசாங்கத்தின் போது சீன கப்பலின் வருகைக்கு வழங்கப்பட்ட அனுமதியினால் தற்போது ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தடுதாறுவதாக இராணுவ ஆய்வாளர் அரூஸ் தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க >>>கோட்டாபய வழங்கிய உத்தரவால் பெரும் குழப்பத்தில் ரணில்
5 விமான நிலையத்தில் அமெரிக்க டொலர்களை செலுத்தும் சுற்றுலாப் பயணிகள், வெளிநாடுகளில் தொழில் புரியும் இலங்கையர்கள் மற்றும் இரட்டை குடியுரிமை பெற்றவர்களுக்கு எரிபொருள் அனுமதிப்பத்திரம் ஒன்றை வழங்க எரிசக்தி அமைச்சர் இணங்கியுள்ளார்.
மேலும் படிக்க >>>விமான நிலையத்தில் டொலர்களை செலுத்துவோருக்கு எரிபொருள் அனுமதிப்பத்திரம்
5 காலிமுகத்திடல் போராட்டத்தின் ஆரம்பத்தில் இருந்தே கொழும்பில் உள்ள நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் இருந்து தினமும் உணவு வழங்கப்பட்டு வந்துள்ளதாக பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது.
மேலும் படிக்க >>>போராட்டகாரர்களுக்கு தினமும் 500 உணவு பொதிகளை வழங்கிய நட்சத்திர ஹோட்டல்
6 அரச ஊழியர்களுக்கு வழங்கப்பட்டுள்ள வெள்ளிக்கிழமை விடுமுறை தொடர்பில் அறிவிப்பொன்று வெளியாகியுள்ளது.
மேலும் படிக்க >>>உடனடியாக இரத்துச் செய்யப்படும் சுற்றறிக்கை
7 உலக சந்தையில் எரிவாயு விலைகள் குறைந்துள்ளதை கவனத்தில் கொண்டு எதிர்வரும் வெள்ளிக்கிழமை இலங்கையில் சமையல் எரிவாயு விலையை குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் தலைவர் முதித்த பீரிஸ் தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க >>>சமையல் எரிவாயு விலை குறைக்கப்படும்:லிட்ரோ தலைவர்
8 சீரற்ற காலநிலையினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதற்காக பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு செல்லுமாறு இராணுத்தினருக்கு, இராணுவத் தளபதி ஜெனரல் விக்கும் லியனகே பணிப்புரை விடுத்துள்ளார்.
மேலும் படிக்க >>>படையினரை களமிறங்குமாறு இராணுவ தளபதி உத்தரவு
9 முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச எதிர்வரும் 11ம் திகதி நாடு திரும்ப உள்ளதாக சிங்கள ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
மேலும் படிக்க >>>கோட்டாபயவின் இலங்கை விஜயம் தொடர்பில் வெளியான புதிய தகவல்
10 விசாரணை என்ற பெயரில் எங்களை அழைத்து அச்சுறுத்துவதன் மூலமோ அல்லது எங்களை கைது செய்து சித்திரவதை செய்துவிட்டு விடுவிப்பதன் மூலமோ அல்லது எங்களைக் கைது செய்து சிறையில் தொடர்ந்து அடைத்து வைப்பதன் மூலமோ அரசாங்கத்திற்கு எதிரான எங்களின் குரலை அடக்கவே முடியாது என காலிமுகத்திடல் போராட்டக் குழுவைச் சேர்ந்த சமூக ஊடகச் செயற்பாட்டாளர் ‘ரெட்டா’ என்றழைக்கப்படும் ரதிந்து சேனாரத்ன தெரிவித்துள்ளார்.