கோட்டாபய வழங்கிய உத்தரவால் பெரும் குழப்பத்தில் ரணில்: இராணு ஆய்வாளர்
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய அரசாங்கத்தின் போது சீன கப்பலின் வருகைக்கு வழங்கப்பட்ட அனுமதியினால் தற்போது ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தடுதாறுவதாக இராணுவ ஆய்வாளர் அரூஸ் தெரிவித்துள்ளார்.
எமது லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,
ரணில் விக்ரமசிங்க தடுமாறுவதாகவும் கூற முடியாது ஏனென்றால், அம்பாந்தோட்டை துறைமுகத்தை மகிந்த ராஜபக்ச சீனாவின் உதவியுடன் நிர்மாணித்த போது அதனை 2017ஆம் ஆண்டு எழுதி கொடுத்தவர் ரணில் விக்ரமசிங்கதான்.
அதாவது இலங்கையின் வெளிவிவகார கொள்கையை பொருத்தவரை எல்லா நாடுகளையும் தமக்கு ஆதரவாக வைத்திருப்பதற்குரிய முயற்சிகளை தொடர்ந்தும் மேற்கொண்டுதான் வருகிறார்கள்.
தற்போது ரணில் விக்ரமசிங்கவை பொருத்த வரை அவர் இந்தியாவின் கோபத்தை தணிப்பதற்காக முன்னைய அரசாங்கம் தொடர்பாக கருத்தை வெளியிட்டுள்ளார் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.