உடனடியாக இரத்துச் செய்யப்படும் சுற்றறிக்கை! அரச ஊழியர்களுக்கு முக்கிய அறிவிப்பு
அரச ஊழியர்களுக்கு வழங்கப்பட்டுள்ள வெள்ளிக்கிழமை விடுமுறை தொடர்பில் அறிவிப்பொன்று வெளியாகியுள்ளது.
அதன்படி விவசாய நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்காக அரச ஊழியர்களுக்கு வெள்ளிக்கிழமை விடுமுறை என்ற சுற்றறிக்கையை உடனடியாக இரத்துச் செய்ய அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
வெள்ளிக்கிழமை விடுமுறை
எரிபொருள் நெருக்கடி காரணமாக அத்தியாவசிய சேவைகள் தவிர்ந்த ஏனைய அனைத்து சேவைகளுக்கும் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் பொது அலுவலக விடுமுறையாக பிரகடனப்படுத்தப்பட்டிருந்தது.
விவசாய நடவடிக்கைகளை மேற்கொள்ளும் நோக்கிலேயே அரச ஊழியர்களுக்கு நான்கு நாள் வேலை வாரத்திற்கு முன்னதாக அமைச்சரவை அனுமதி வழங்கியிருந்தது.
பல தசாப்தங்களில் மோசமான நிதி நெருக்கடியுடன் போராடும் இலங்கை எரிபொருள் பற்றாக்குறையைச் சமாளிக்கவும், உணவுப் பயிரிடுவதற்கும் அரச ஊழியர்களை ஊக்குவிக்க அரசாங்கம் இந்த நடவடிக்கையை முன்னெடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
அரச ஊழியர்களின் வெள்ளிக்கிழமை விடுமுறைக்கான சுற்றறிக்கை வெளியீடு |
அரச ஊழியர்களுக்கு வெள்ளிக்கிழமை விடுமுறை வழங்கப்பட்டமைக்கான காரணம் |

253 பந்துகளில் 266 ரன் விளாசிய வீரர்! 228 ரன் குவித்த கேப்டன்..ஒரே இன்னிங்சில் இருவர் இரட்டைசதம் News Lankasri

அமெரிக்காவில் பிறந்தவர்களை நாடுகடத்துவதுதான் அடுத்த வேலை: அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் சூசகம் News Lankasri
