போராட்டகாரர்களுக்கு தினமும் 500 உணவு பொதிகளை வழங்கிய நட்சத்திர ஹோட்டல்:பொலிஸார் தகவல்
காலிமுகத்திடல் போராட்டத்தின் ஆரம்பத்தில் இருந்தே கொழும்பில் உள்ள நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் இருந்து தினமும் உணவு வழங்கப்பட்டு வந்துள்ளதாக பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது.
உணவுப் பொதிகள் இலவசமாக விநியோகிக்கப்பட்டதா?- விசாரிக்கும் பொலிஸார்
இது சம்பந்தமாக பொலிஸார் ஆரம்ப கட்ட விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர். போராட்டகாரர்களுக்கு தினமும் 500 முதல் 600 வரையான உணவுப் பொதிகள், போராட்டத்தின் ஆரம்பத்தில் இருந்து அண்மை காலம் வரை வழங்கப்பட்டு வந்துள்ளதாக தெரிவருகிறது.
இந்த உணவு இலவசமாக விநியோகிக்கப்பட்டதா அல்லது ஏதேனும் ஒரு அமைப்பின் ஊடாக வழங்கப்பட்டதா என்பதை அறிய பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
பொலிஸார் கைது செய்துள்ள போராட்டகார்களிடம் நடத்தப்பட்ட விசாரணைகளில் இந்த தகவல் தெரியவந்துள்ளது.
காலிமுகத்திடலில் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கு தினமும் 24 மணி நேரமும் உணவு மற்றும் பானங்கள் வழங்கப்பட்டு வந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
இதற்கு கொழும்பில் உள்ள சில செல்வந்தர்கள் பணத்தை வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.