வெளிநாட்டிலிருந்து இலங்கை வந்த இளம் பெண்ணுக்கு காத்திருந்த அதிர்ச்சி
வெளிநாட்டில் இருந்து இலங்கைக்கு சுற்றுலா வந்த இளம் பெண் ஒருவருக்கு பாலியல் ரீதியான துன்புறுத்தலை மேற்கொண்ட முச்சக்கர வண்டி சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.
பதுளை, பம்பரு எல்ல நீர்வீழ்ச்சியை பார்வையிடச் சென்ற வெளிநாட்டு பெண்ணே இந்த நெருக்கடிக்கு முகங்கொடுத்துள்ளார்.
பாலியல் குற்றச்சாட்டில் முச்சக்கரவண்டி சாரதி கடந்த 4ஆம் திகதி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
சாரதி கைது
ஜெர்மனியிலிருந்து இலங்கைக்குச் சுற்றுலா வந்த 26 வயதுடைய இளம் பெண்ணே இந்த சம்பவத்திற்கு முகம் கொடுத்துள்ளார்.

நுவரெலியா, ஹாவாஎலிய பகுதியைச் சேர்ந்த 45 வயதுடைய முச்சக்கரவண்டி சாரதியே கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த வெளிநாட்டு பெண், பம்பரு எல்ல நீர்வீழ்ச்சியைப் பார்ப்பதற்காக சந்தேக நபரின் முச்சக்கரவண்டியில் பயணித்துள்ளார்.
பாலியல் தொல்லை
இதன்போது சாரதி தமக்கு பாலியல் ரீதியான தொல்லைகளைக் கொடுத்ததாக அந்த யுவதி சுற்றுலாப் பொலிஸாரிடம் முறைப்பாடு செய்துள்ளார்.
பெண்ணின் முறைப்பாட்டை தொடர்ந்து, முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் சந்தேக நபரான சாரதி கைது செய்யப்பட்டார்.
கைது செய்யப்பட்ட குறித்த சந்தேக நபர், வெலிமடை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார் என்றும் தெரிவிக்கப்பட்டள்ளது.
சீதாவை அடித்த அருண், மீனா செய்த காரியம், ஆதாரம் திரட்டிய ரோஹினி... சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் Cineulagam
சொத்து விஷயத்தில் குணசேகரன் அதிரடி, ஜனனியின் நிலை...எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ Cineulagam