உயிரை காவு வாங்கும் ஆபத்து - இலங்கையில் எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை
உயிரை காவு வாங்கும் ஆபத்தை கொண்ட நிபா வைரஸை கண்டறியும் திறனை இலங்கையிலுள்ள வைத்திய ஆராய்ச்சி ஸ்தாபனம் (Medical Research Institute - MRI) அதீத தொழிநுட்பத்துடன் மேம்படுத்தியுள்ளது.
இலங்கையில் நிபா வைரஸ் பரவலை கண்டறியவும், அதற்கு பதிலளிக்கவும் தயார் நிலையை தீவிரப்படுத்தும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
சஞ்சீவ வழக்கில் சிக்கிய பெண் சட்டத்தரணியிடம் 25 மில்லியன் மதிப்புள்ள கார்.. சிஐடி வெளியிட்ட பரபரப்பு தகவல்கள்
பரிசோதனை
இதன்மூலம் வைரஸ் தொற்று சந்தேகத்திற்குரிய நபர்களுக்கு ஆரம்பத்திலேயே பரிசோதனைகளை மேற்கொண்டு வைரஸ் பாதிப்பை உறுதி செய்ய முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்காக நவீன தொழிநுட்ப கருவிகள் ஆய்வகத்தில் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. விலங்குகளிடமிருந்து மனிதர்களுக்கு பரவும் நிபா வைரஸ் முக்கியமாக 'பழம் தின்னும் வௌவால்கள்' மூலம் பரவுகிறது.

பரவல்
அசுத்தமான உணவு மற்றும் பாதிக்கப்பட்ட மனிதர்களுடனான நேரடித் தொடர்பின் மூலமும் இது பரவக்கூடும் என தெரியவருகிறது.
இந்த வைரஸால் பாதிக்கப்படுபவர்களில் 40% முதல் 75% வரை உயிரிழக்க வாய்ப்புள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது. இது மிகவும் ஆபத்தான தொற்றுநோய்களில் ஒன்றாகக் கருதப்படுகிறமை குறிப்பிடத்தக்கது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
சிங்கள இனமயமாக்கலை எதிர்கொள்ளும் ஈழத்தமிழினம் 3 நாட்கள் முன்
திடீரென பற்றியெரிந்த ஈரான் தலைநகர் - அமெரிக்காவை அச்சுறுத்தும் ஈரானின் ஸ்லீப்பர் செல்ஸ் News Lankasri