சமையல் எரிவாயு விலை குறைக்கப்படும்:லிட்ரோ தலைவர்
உலக சந்தையில் எரிவாயு விலைகள் குறைந்துள்ளதை கவனத்தில் கொண்டு எதிர்வரும் வெள்ளிக்கிழமை இலங்கையில் சமையல் எரிவாயு விலையை குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் தலைவர் முதித்த பீரிஸ் தெரிவித்துள்ளார்.
அதிகரிக்கப்பட்ட விலையை விட விலை குறைப்பு இருக்கும்
அண்மையில் எரிவாயுவின் விலை 50 ரூபாவால் அதிகரிக்கப்பட்டதுடன் அதனை விட அதிகமாக இந்த விலை குறைப்பு இருக்கும் எனவும் அவர் கூறியுள்ளார்.
16 மாதங்களுக்கு தொடர்ந்தும் எரிவாயுவை விநியோகிக்கக் கூடிய வகையில் எரிவாயு கையிருப்பில் இருப்பதாகவும் லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் பல மாதங்களாக சமையல் எரிவாயுவுக்கு பெரும் தட்டுப்பாடு நிலவியது. தற்போது போதுமான அளவில் எரிவாயு விநியோகிக்கப்பட்டு வருவதுடன் தட்டுப்பாடும் நீங்கியுள்ளது எனவும் முதித்த பீரிஸ் மேலும் கூறியுள்ளார்.

253 பந்துகளில் 266 ரன் விளாசிய வீரர்! 228 ரன் குவித்த கேப்டன்..ஒரே இன்னிங்சில் இருவர் இரட்டைசதம் News Lankasri

அமெரிக்காவில் பிறந்தவர்களை நாடுகடத்துவதுதான் அடுத்த வேலை: அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் சூசகம் News Lankasri
