திறந்தவெளிச் சிறையாக மாறியுள்ளது இலங்கை! தயாசிறி ஜயசேகர எம்.பி. கடும் குற்றச்சாட்டு

Sri Lanka Parliament Dayasiri Jayasekara Sri Lanka Government
By Rakesh Nov 03, 2026 06:20 AM GMT
Report

பாதுகாப்புத் துறையினருக்கு இருந்த கைது செய்யும் அதிகாரங்கள் இராணுவத்தினருக்கும் ஏனைய சில நிறுவனங்களுக்கும் வழங்கப்பட்டுள்ளது. சந்தேகநபர்களை ஒரு வருடம் வரை தடுப்புக் காவலில் வைக்கும் அதிகாரமும் பாதுகாப்புச் செயலாளருக்கு வழங்கப்பட்டு நாடே ஒரு வெளிப்படையான சிறைச்சாலையாக மாறியுள்ளது என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.

கொழும்பில் நேற்று திங்கட்கிழமை ஊடகங்களுக்குக் கருத்து வெளியிடும்போதே இதனைக் கூறிய அவர், மேலும் குறிப்பிடுகையில்,

"அரசு ஜனநாயக உரிமைகளை முடக்கி, நாட்டை இராணுவமயமாக்கல் நோக்கியும் பொருளாதார நெருக்கடியை நோக்கியும் தள்ளி வருகின்றது. குற்றத்தடுப்பு மற்றும் பாதுகாப்பு தொடர்பான புதிய சட்டமூலங்கள் மூலம் நாடு ஒரு இராணுவ இராச்சியமாக மாற்றப்பட்டு வருகின்றது.

அசம்பாவிதங்களுக்கு சபாநாயகரே பொறுப்பு 

பாதுகாப்புத் துறையினருக்கு இருந்த கைது செய்யும் அதிகாரங்கள் இராணுவத்தினருக்கும் ஏனைய சில நிறுவனங்களுக்கும் வழங்கப்பட்டுள்ளதுடன், சந்தேகநபர்களை ஒரு வருடம் வரை தடுப்புக் காவலில் வைக்கும் அதிகாரமும் பாதுகாப்புச் செயலாளருக்கு வழங்கப்பட்டு நாடே ஒரு வெளிப்படையான சிறைச்சாலையாக மாறியுள்ளது.

கடந்த காலங்களில் வீதிகளை மறித்துத் தொடர்ச்சியாகப் போராடியவர்களே இன்று மக்களின் போராட்ட உரிமைகளை நசுக்கி வருகின்றனர்.

திறந்தவெளிச் சிறையாக மாறியுள்ளது இலங்கை! தயாசிறி ஜயசேகர எம்.பி. கடும் குற்றச்சாட்டு | Sri Lanka Has Turned Into An Open Air Prison

சர்வதேச மற்றும் மனித உரிமைகள் அமைப்புகளின் கேள்விகளையும் அரசு பொருட்படுத்தவில்லை. தனியார் துறை விலையை உயர்த்தியதைத் தொடர்ந்து அரசும் எரிபொருள் விலையை அதிகரித்து வருகின்றது. கோதுமை மா மற்றும் பாண் போன்ற அத்தியாவசியப் பொருள்களின் விலைகள் எவ்விதக் கட்டுப்பாடும் இன்றி உயர்த்தப்பட்டுள்ளன.

கடந்த காலத்தில் விலையேற்றத்தின்போது வரியைக் குறைக்க வேண்டும் என்று கூறியவர்கள், ஆட்சிக்கு வந்த பிறகு 12 தடவைகளுக்கும் மேலாக வரிகளை அதிகரித்து மக்கள் மீதான சுமையை உயர்த்தியுள்ளனர்.

சிறைச்சாலைகளில் நிலவும் நெருக்கடிகள் குறித்து ஆராய விசேட நாடாளுமன்றக் குழுவொன்றைக் கோரிய போதிலும் சபாநாயகர் அதற்கு அனுமதியளிக்கவில்லை.

எதிர்காலத்தில் சிறைச்சாலைகளில் ஏற்படும் அசம்பாவிதங்களுக்கு அரசின் கைப்பாவையாகச் செயற்படும் சபாநாயகரே முழுப் பொறுப்பையும் ஏற்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார். 

பணச்சலவை வழக்கிலிருந்து யோஷித ராஜபக்சவின் பாட்டி டெய்சி விடுவிப்பு

பணச்சலவை வழக்கிலிருந்து யோஷித ராஜபக்சவின் பாட்டி டெய்சி விடுவிப்பு

திருகோணமலையில் துப்பாக்கிச்சூடு! உயிரிழந்தவர் கடற்படை வீரர் - பொலிஸார் வெளியிட்டுள்ள சந்தேகம்

திருகோணமலையில் துப்பாக்கிச்சூடு! உயிரிழந்தவர் கடற்படை வீரர் - பொலிஸார் வெளியிட்டுள்ள சந்தேகம்

1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், வண்ணார்பண்ணை, London, United Kingdom

14 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, உருத்திரபுரம், திருவையாறு, Cergy-Pontoise, France

03 Nov, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
16ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டுக்குழி, கிளிச்சி-ச ous ஸ்-போயிஸ், France

04 Nov, 2010
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, Zürich, Switzerland

03 Nov, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, London, United Kingdom

26 Oct, 2026
13ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு குறிகட்டுவான், கனடா, Canada

03 Nov, 2013
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், London, United Kingdom

03 Nov, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Brampton, Canada

04 Nov, 2025
மரண அறிவித்தல்

அல்வாய், உபயகதிர்காமம்

01 Nov, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், மானிப்பாய், London, United Kingdom, கனடா, Canada

02 Nov, 2020
மரண அறிவித்தல்

கைதடி, Isle of Wight, United Kingdom

30 Oct, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, யாழ்ப்பாணம், யாழ்ப்பாணம்

31 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

அனலைதீவு, Brampton, Canada

30 Oct, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Northeim, Germany, Birmingham, United Kingdom

28 Oct, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பாண்டியன்குளம், Toronto, Canada

30 Oct, 2020
16ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, Scarborough, Canada

28 Oct, 2010
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Thun, Switzerland

27 Oct, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US