திருகோணமலையில் துப்பாக்கிச்சூடு! உயிரிழந்தவர் கடற்படை வீரர் - பொலிஸார் வெளியிட்டுள்ள சந்தேகம்
புதிய இணைப்பு
திருகோணமலை கப்பல்துறை பகுதியில் முச்சக்கரவண்டி ஒன்றை இலக்குவைத்து நடத்தப்பட்ட துப்பாக்கிச் சட்டில் உயிரிழந்தவர் கடற்படை வீரர் என்று அடையாளம் காணப்பட்டுள்ளார்.
சம்பவத்தில் மேலும் இருவர் காயமடைந்துள்ளனர்.
உயிரிழந்தவர் 39 வயதுடைய திருகோணமலையைச் சேர்ந்தவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்துள்ளார்.
காயமடைந்த 28 மற்றும் 38 வயதுடைய இருவர் திருகோணமலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அவர்களில் ஒருவர் மேலதிக சிகிச்சைக்காக அநுராதபுரம் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

நேற்று (02) இரவு, வீதியோரத்தில் நிறுத்தப்பட்டிருந்த முச்சக்கரவண்டிக்குள் சிலர் இருந்தபோது இந்தத் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளது.
ஆரம்பகட்ட விசாரணைகளின்படி, T-56 ரக துப்பாக்கி பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும், போதைப்பொருள் கடத்தல் தொடர்பான முரண்பாடே தாக்குதலுக்கான காரணமாக இருக்கலாம் எனவும் பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
சம்பவம் தொடர்பில் திருகோணமலை குற்றப் புலனாய்வுப் பிரிவு உள்ளிட்ட பல பொலிஸ் குழுக்கள் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றன.
செய்தி - அமல்
முதலாம் இணைப்பு
திருகோணமலை - கப்பல்துறை சந்திக்கு அருகில் பயணித்த முச்சக்கரவண்டி ஒன்றினை குறிவைத்து அடையாளம் தெரியாத நபர்கள் நடத்திய துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், இருவர் படுகாயமடைந்துள்ளனர்.
குறித்த சம்பவம் நேற்று (02.11.2026) இரவு 9.15 மணிக்கு இடம்பெற்றுள்ளதாக கப்பல்துறை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
திருகோணமலை பேக்கரிய வீதி, பெதிஸ்புரவைச் சேர்ந்த 39 வயதுடைய சிறி நாராயண ரத்ன விபூஷண குலதுங்க ஆராச்சிகே கயன் மதுசங்க சோமரத்ன என்பவரே சம்பவ இடத்தில் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.
சம்பவத்தில் உயிரிழப்பு

சம்பவ தினமான நேற்று இரவு 9.15 மணியளவில் பச்சை நிற முச்சக்கர வண்டியில் மூன்று பேர் பிரயாணித்த போது அவர்கள் மீது அடையாளம் தெரியாதவர்கள் நடத்திய துப்பாக்கி சூட்டில் சம்பவ இடத்தில் மதுசங்க சோமரத்ன என்பவர் உயிரிழந்தார்.
இதில் 36 வயதுடைய திருகோணமலை ஆண்டங்குளம், பகுதியைச் சேர்ந்த சரித் அசங்க மற்றும் அபயபுர லெனின் மாவத்தையைச் சேர்ந்த 28 வயதுடைய ஃபிரடெரிக் தர்ஷா டெவெண்டா (டாரல்) என்ற இருவரும் படுகாயமடைந்த நிலையில் திருகோணமலை பொது வைத்தியசாலை அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பாக கப்பல்துறை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
சற்றுமுன்னர் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட நாமல்! பிணை கோரிக்கை தொடர்பில் பிறப்பிக்கப்படவுள்ள உத்தரவு
you may like this video