இலங்கையில் அதிரடியாக கைது செய்யப்பட்ட வெளிநாட்டு கும்பல்! சிக்கிய பாரிய மோசடி
நாட்டிலிருந்து இணையதளம் ஊடாக ஒன்லைன் நிதி மோசடிகள் மற்றும் சட்டவிரோத மோசடிகளில் ஈடுபட்டு வந்த வெளிநாட்டவர்கள் குழுவினர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கொழும்பு, மருதானை டெக்னிகல் சந்தி பகுதியில் வைத்து சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
விரிவான விசாரணைகளை ஆரம்பித்துள்ள பொலிஸார்
பொலிஸ் மத்திய குற்றவியல் விசாரணை பணியகம், குற்றப் புலனாய்வுத் திணைக்களம் மற்றும் குடிவரவு குடியகல்வுத் திணைக்கள அதிகாரிகள் இணைந்து நடத்திய கூட்டுச் சோதனையின் போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மருதானை டெக்னிகல் சந்திப் பகுதியில் அமைந்துள்ள மூன்று மாடி கட்டிடமொன்றில் இந்த மோசடி நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதுடன், அதில் தொடர்புடைய 21 வெளிநாட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களில் 12 சீன நாட்டவர்களும், 6 பங்களாதேஷ் நாட்டவர்களும், மூன்று இந்திய நாட்டவர்களும் அடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது.
சம்பவம் தொடர்பில் பொலிஸார் விரிவான விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
மகளின் காதலைக் கண்டிக்க பிக் பாஸ் வீட்டுக்கே வந்த பெற்றோர் - சாகத் தோனுது எனக் கதறிய போட்டியாளர்! Manithan