இலங்கையில் வாகன சாரதி அனுமதி பத்திரத்தை பெறுவது எவ்வாறு...!

Sri Lanka Driving Licence Department of Motor Vehicles
By Dev May 21, 2025 08:13 AM GMT
Report

இலங்கையில் சாரதி அனுமதிப் பத்திரத்தை பெறும் செயன்முறை தொடர்ச்சியான படிமுறைகளை கொண்ட ஒரு செயற்பாடாக அமைந்துள்ளது.

நீங்கள் வாகன அனுமதிப்பத்திரத்திற்கு விண்ணப்பிக்கும் ஒருவராகவோ அல்லது அதற்காக ஒருவரை வழிநடுத்துபவராகவோ இருப்பின் நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டிய அனைத்தையும் இந்த பதிவின் மூலம் அறிந்துக்கொள்ள முடியும்.

அடுத்தவருடம் வெள்ளவத்தையில் நினைவேந்தல் செய்தால் யுத்தம் வெடிக்கும் : தேரர் எச்சரிக்கை

அடுத்தவருடம் வெள்ளவத்தையில் நினைவேந்தல் செய்தால் யுத்தம் வெடிக்கும் : தேரர் எச்சரிக்கை

தகுதி மற்றும் ஆவணங்கள்

வயது எல்லை : நீங்கள் கட்டாயமாக 18 வயது அல்லது அதற்கு மேற்பட்டவராக இருக்க வேண்டும்.

இலங்கையில் வாகன சாரதி அனுமதி பத்திரத்தை பெறுவது எவ்வாறு...! | Sri Lanka Driving Exam In Tamil

அடையாள ஆவணம்: தேசிய அடையாள அட்டை(NIC) மற்றும் தேசிய அடையாள எண்ணை உள்ளடக்கிய கடவுச்சீட்டு ஆகிய ஆவணங்கள் ஏற்றுக்கொள்ளப்படும்.

அத்துடன், உங்களின் பிறப்புச் சான்றிதழையும் எடுத்துச் செல்ல வேண்டும். 

படிமுறை 1 - மருத்துவ பரிசோதனை

தேசிய போக்குவரத்து மருத்துவ நிறுவனத்தினால்(NTMI) வழங்கப்படும் மருத்துவ சான்றிதழ் சாரதி அனுமதிப் பத்திரத்தை பெறுவதற்கு முக்கியமானதாகும்.

இலங்கையில் வாகன சாரதி அனுமதி பத்திரத்தை பெறுவது எவ்வாறு...! | Sri Lanka Driving Exam In Tamil

முக்கிய NTMI மையங்கள் வெரஹெர, நுகேகொட, குருநாகல், கண்டி, காலி, அனுராதபுரம், யாழ்ப்பாணம் மற்றும் பிற முக்கிய நகரங்களில் அமைந்துள்ளன. இதற்கான முன்பதிவுகளை ஒன்லைனில் செய்துக்கொள்ள முடியும். 

ஒன்லைனில் முன்பதிவு செய்ய 'Link'ஐ அழுத்தி உங்களின் மாவட்டத்தை தெரிவு செய்யுங்கள்.

அத்துடன், நீண்ட வரிசைகளை தவிர்ப்பதற்கு முன்கூட்டியே NTMI மையங்களுக்கு வருவது நல்லது.

படிமுறை 2 - மோட்டார் போக்குவரத்துத் துறையில்(DMT) பதிவு செய்தல்

உங்கள் மாவட்டத்தில் உள்ள மோட்டார் போக்குவரத்துத் துறை அலுவலகத்தில்(DMT) தேவையான ஆவணங்களைச் சமர்ப்பிக்கவும்.

இலங்கையில் வாகன சாரதி அனுமதி பத்திரத்தை பெறுவது எவ்வாறு...! | Sri Lanka Driving Exam In Tamil

குறித்த செயன்முறைக்கு 2-5 மணிநேரம் வரையான காலம் செலவிடப்படலாம்.

பதிவு செய்யும் செயன்முறை முடிந்ததும் உங்கள் பரீட்சைக்கான திகதியைப் பெற முடியும்.

படிமுறை 3 - எழுத்துப் பரீட்சை மற்றும் பழகுபவர்களின் அனுமதிப்பத்திரம்

எழுத்துப் பரீட்சை போக்குவரத்து விதிகள் மற்றும் சாலை அடையாளங்கள் பற்றிய உங்களின் அறிவை மதிப்பிடும்.

எழுத்துப் பரீட்சையில் சித்தியடையும் பட்சத்தில் உயர்ந்தபட்ச 18 மாதங்களுக்கு என ஒரு பழகுபவர்களின் அனுமதிப்பத்திரம் வழங்கப்படுகிறது.

இலங்கையில் வாகன சாரதி அனுமதி பத்திரத்தை பெறுவது எவ்வாறு...! | Sri Lanka Driving Exam In Tamil

நீங்கள் 18 வயது அல்லது அதற்கு மேற்பட்ட வயதுடையவராக இருந்தால், மூன்று மாதங்களில் நடைமுறை தேர்வுக்கான(Trial/Practical exam) திகதி வழங்கப்படும்.

நீங்கள் 18 வயதிற்குட்பட்டவராக இருந்தால், குறித்த திகதியைப் பெற 18 வயது வரும் வரை காத்திருக்க வேண்டும்.

எவ்வாறாயினும், பழகுபவர்களின் அனுமதிப்பத்திரத்தை வைத்திருப்பவர் வாகனம் செலுத்திப் பழகலாம்.

படிமுறை 4: நடைமுறைத் தேர்வு

Trial அல்லது Practical exam என அழைக்கப்படும் நடைமுறைத் தேர்வில் நீங்கள் வாகனத்தை செலுத்திக் காட்டி அதில் தேர்ச்சி பெற வேண்டும்.

இலங்கையில் வாகன சாரதி அனுமதி பத்திரத்தை பெறுவது எவ்வாறு...! | Sri Lanka Driving Exam In Tamil

சாலையில் வாகனத்தை ஓட்டி காட்டுவதோடு ரிவர்ஸ் பார்க்கிங்(Reverse parking) போன்றவற்றையும் செய்துக் காட்ட வேண்டும்.

படிமுறை 5: சாரதி அனுமதி பத்திரத்தை பெறுதல்

நடைமுறைத் தேர்வில் நீங்கள் தேர்ச்சி பெற்ற பின்னர் உங்கள் சாரதி அனுமதி பத்திரத்தை பெற உங்களுக்கு இரண்டு விருப்பத் தேர்வுகள் உள்ளன.

முதலாவதாக கூடுதல் கட்டணத்தை செலுத்தி அதே நாளில் சாரதி அனுமதி பத்திரத்தை பெற்றுக் கொள்ள முடியும்.

இலங்கையில் வாகன சாரதி அனுமதி பத்திரத்தை பெறுவது எவ்வாறு...! | Sri Lanka Driving Exam In Tamil

மற்றொன்று, தபால் மூலமாக சாரதி அனுமதி பத்திரத்தை பெற்றுக் கொள்ள முடியும். இதற்கு சில வாரங்கள் முதல் மாதங்கள் வரையான காலம் எடுக்கலாம்.

இந்த வழிமுறைகளைப் பின்பற்றுவதன் மூலம், நீங்கள் இலங்கையில் சாரதி அனுமதி பத்திரத்தை வெற்றிகரமாகப் பெறலாம்.

பாதுகாப்பான முறையில் வாகனம் ஓட்டுவதுடன் எப்போதும் போக்குவரத்து விதிகளைப் பின்பற்றவும்.

ஊழியர் சேமலாப நிதி (EPF) சேவை தொடர்பில் வெளியான அறிவிப்பு

ஊழியர் சேமலாப நிதி (EPF) சேவை தொடர்பில் வெளியான அறிவிப்பு

ஜனாதிபதியை சந்திக்க வேண்டுமென கூறி குழப்பம் விளைவித்த நபர் கைது

ஜனாதிபதியை சந்திக்க வேண்டுமென கூறி குழப்பம் விளைவித்த நபர் கைது

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 
மரண அறிவித்தல்

யாழ். அத்தியடி, Adelaide, Australia, Melbourne, Australia

04 Jun, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இடைக்காடு, London, United Kingdom

06 Jun, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, வடலியடைப்பு, நல்லூர், கொழும்பு

05 Jun, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல், புளியங்குளம்

17 May, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், திருநகர் தெற்கு கிளிநொச்சி

28 May, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உரும்பிராய் மேற்கு

07 May, 2026
மரண அறிவித்தல்

பொலிகண்டி, Markham, Canada

01 Jun, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை ஊரிக்காடு, Scarborough, Canada

04 Jun, 2019
மரண அறிவித்தல்
15ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை வீமன்காமம், Catford, United Kingdom

05 Jun, 2011
7ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, முரசுமோட்டை, Noisy-le-Grand, France, உதயநகர்

05 Jun, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Brugg, Switzerland

08 May, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Toronto, Canada

01 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் வடக்கு, வெள்ளவத்தை

05 Jun, 2025
மரண அறிவித்தல்

அல்வாய், Colchester, United Kingdom

29 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நுணாவில் மேற்கு, மன்னார்

04 May, 2026
அகாலமரணம்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, மாளிகைத்திடல், Mississauga, Canada

15 May, 2025
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, London, United Kingdom

26 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, கொட்டாஞ்சேனை

16 May, 2025
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, வாணக்குடியிருப்பு, தம்பசிட்டி, கொழும்பு, London, United Kingdom

28 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், கொட்டாஞ்சேனை

03 Jun, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி
11ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை, நல்லூர், கனடா, Canada

02 Jun, 2015
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, கொழும்பு

03 Jun, 2015
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கிளிநொச்சி, டென்மார்க், Denmark, London, United Kingdom

01 Jun, 2015
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US