ஒரே நாளில் பொலிஸாரின் சுற்றிவளைப்பில் சிக்கிய நூற்றுக்கணக்கானோர்!
நாடளாவிய ரீதியில் பொலிஸாரால், நேற்று சனிக்கிழமை (07) மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பில் போதைப்பொருட்களுடன் 438 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதன்படி, 155 கிராம் 448 மில்லி கிராம் ஹெரோயினுடன் 127 சந்தேகநபர்களும், 499 கிராம் 526 மில்லி கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் 158 சந்தேகநபர்களும், 3.5 கிலோகிராம் கஞ்சாவுடன் 135 சந்தேகநபர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
விசேட சுற்றிவளைப்பு
அத்துடன், 1.1378 கிலோகிராம் மாவா போதைப்பொருளுடன் 06 சந்தேக நபர்களும், 157 போதைமாத்திரைகளுடன் 12 பேரும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பதில் பொலிஸ் மா அதிபரின் அறிவுறுத்தலின் அடிப்படையில், போதைப்பொருள் கடத்தல்கள் உள்ளிட்ட பல்வேறு குற்றங்களை தடுப்பதற்காக கடந்த ஏப்ரல் மாதம் 13ஆம் திகதி முதல் நாடளாவிய ரீதியில் பல சுற்றிவளைப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
மேலும், பொலிஸாரின் இந்த விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கைகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.





உலக அரசியல் பற்றி ஒரு கேள்வி - யாரை நோக்கி கடிதம் எழுத வேண்டும்! 19 மணி நேரம் முன்

நீட் தேர்வில் 99.9 சதவீதத்துடன் முதலிடம் பிடித்த மாணவி யார்? இவரின் வெற்றிக்கான ரகசியம் News Lankasri
