இலங்கையின் 3ஆவது பரஸ்பர மதிப்பீடு தொடர்பில் ஜனாதிபதி தலைமையில் விசேட கலந்துரையாடல்

Central Bank of Sri Lanka Anura Kumara Dissanayaka Sri Lanka President of Sri lanka
By Rakesh Aug 05, 2026 05:57 AM GMT
Report

பணம் தூய்தாக்கல் மற்றும் பயங்கரவாதத்திற்கான நிதியளிப்பை தடுக்கும் சர்வதேச தரநிலைகள் தொடர்பாக இலங்கை எதிர்கொள்ளும் மூன்றாவது பரஸ்பர மதிப்பீடு (3rd Mutual Evaluation) குறித்த விசேட கலந்துரையாடல், ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையில் நேற்று (04.08.2026) ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது.

சர்வதேச நிதிக் கட்டமைப்பில் இலங்கையின் நம்பகத்தன்மையை உறுதிப்படுத்தும் இந்த மூன்றாவது மதிப்பீட்டுச் செயன்முறையை வெற்றிகரமாக்குவதற்கு அனைத்து அரச மற்றும் தனியார் துறை நிறுவனங்களின் தீவிரப் பங்களிப்பு அவசியம் என்று ஜனாதிபதி இங்கு வலியுறுத்தினார்.

நாட்டை விட்டு தப்பியோடிய முன்னாள் ஜனாதிபதியின் மகனும் அவர் மனைவியும்..!

நாட்டை விட்டு தப்பியோடிய முன்னாள் ஜனாதிபதியின் மகனும் அவர் மனைவியும்..!

மதிப்பீட்டுக் குழுவின் கள ஆய்வு

இது குறித்த நிதியியல் தொடர்பான செயலணி (FATF) அறிமுகப்படுத்திய 40 பரிந்துரைகள் தொடர்பான தொழில்நுட்ப சாதக நிலை, அந்த பரிந்துரைகளைச் செயற்படுத்துவதில் காணப்படும் 11 உடனடிப் பலன்கள் ஊடாக மதிப்பிடப்படும் செயல்திறனும் இந்த பரஸ்பர மதிப்பீட்டின் போது மதிப்பீடு செய்யப்படுகிறது. அதற்காக மதிப்பீட்டுக் குழுவின் கள ஆய்வானது இவ்வாண்டு மேற்கொள்ளப்படுகிறது.

அதன்படி, எதிர்வரும் சில மாதங்களுக்குள் குறித்த பரிந்துரைகளை முறையாகச் செயற்படுத்துவதன் அவசியத்தை இங்கு சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, அனைத்து நிறுவனங்களும் சிறந்த ஒருங்கிணைப்புடன் செயற்படுவதன் மூலம் குறித்த செயல்முறையை வெற்றியடையச் செய்ய முடியும் என்றும் குறிப்பிட்டார்.

இலங்கையின் 3ஆவது பரஸ்பர மதிப்பீடு தொடர்பில் ஜனாதிபதி தலைமையில் விசேட கலந்துரையாடல் | Special Discussion Chaired By The President

இந்த மதிப்பீட்டுச் செயல்முறைக்காக இலங்கை 2023 ஆம் ஆண்டு முதல் தயாராகி வந்ததாகவும், கடந்த இரண்டு ஆண்டுகளில் இறுதிக் காலக்கெடு விதிக்கப்பட்டு இந்த தயார் நிலைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாகவும் இலங்கை மத்திய வங்கியின் அதிகாரிகள் இங்கு சுட்டிக்காட்டினர். இது தேசிய மட்டத்திலான கணக்காய்வுச் செயல்முறையாவதுடன், இதனை ஆசிய பசுபிக் பணம் தூய்தாக்கல் தொடர்பான குழு (APG) மேற்கொள்கிறது.

உள்நாட்டில் இந்தச் செயல்முறைக்காக சுமார் 25 அரச நிறுவனத் தரப்பினர்கள் தொடர்புபடுவதுடன், இதற்கான ஒருங்கிணைப்புப் பணிகளை இலங்கை மத்திய வங்கியில் ஸ்தாபிக்கப்பபட்டுள்ள நிதிப் புலனாய்வுப் பிரிவு மேற்கொள்கிறது.

தீவிரமடையும் நோய் பரவல் - இலங்கை மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அவசர எச்சரிக்கை

தீவிரமடையும் நோய் பரவல் - இலங்கை மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அவசர எச்சரிக்கை

செயல் திட்டங்களின் முன்னேற்றம் 

ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட, பணம் தூய்தாக்கல் மற்றும் பயங்கரவாதத்திற்கு நிதியுதவி அளிப்பதைத் தடுத்தல் தொடர்பான செயலணியினால், தொடர்புடைய மதிப்பீட்டுச் செயல்பாட்டின் போது இந்த தரப்பினர்கள் நடைமுறைப்படுத்த வேண்டிய செயல் திட்டங்களின் முன்னேற்றம் கண்காணிக்கப்படும்.

அதன்படி, இது தொடர்பாக சமர்ப்பிக்கப்பட்ட பரிந்துரைகள் மற்றும் செயல் திட்டத்தை அமைச்சுகள் மற்றும் நிறுவன மட்டங்களில் நடைமுறைப்படுத்துவதன் முன்னேற்றம் குறித்து இங்கு மீளாய்வு செய்யப்பட்டதுடன், அதன்போது எழுந்துள்ள சிக்கல்களும் அவற்றை விரைவாகத் தீர்த்துக் கொள்வதற்கு எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் கவனம் செலுத்தப்பட்டது.

இலங்கையின் 3ஆவது பரஸ்பர மதிப்பீடு தொடர்பில் ஜனாதிபதி தலைமையில் விசேட கலந்துரையாடல் | Special Discussion Chaired By The President

இணையவழி ஊடாக இடம்பெறும் சூதாட்டத்தை (Online Gambling) நிறுத்துவதற்கு எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் மற்றும் அது தொடர்பான சட்டங்களை இயற்றும் பணிகளின் தற்போதைய நிலையையும் ஜனாதிபதி இங்கு கேட்டறிந்தார்.

மேலும், குற்றத்தின் மூலம் ஈட்டப்படும் சொத்துக்களின் முகாமைத்துவம் தொடர்பான அதிகாரசபையை நிறுவுவதற்கான பணிகளின் முன்னேற்றம் குறித்தும் இதன்போது ஆராய்ந்த ஜனாதிபதி, அந்த அதிகாரசபையை மேலும் வினைத்திறனான மட்டத்தில் பேணிச் செல்ல வேண்டியதன் அவசியத்தைச் சுட்டிக்காட்டினார்.

குறித்த அதிகாரசபையை நிறுவும் பணிகள் தற்போது நிறைவடைந்துள்ளதுடன், பணிக் குழாமை இணைத்துக்கொள்ளும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அதிகாரிகள் இங்கு சுட்டிக்காட்டினர்.

பொலிஸ் சேவையில் பாரியளவில் ஆளணி வளப் பற்றாக்குறை: அரசாங்கத்தின் தீர்மானம்!

பொலிஸ் சேவையில் பாரியளவில் ஆளணி வளப் பற்றாக்குறை: அரசாங்கத்தின் தீர்மானம்!

GalleryGalleryGalleryGalleryGalleryGallery
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US