கணவனுடன் சென்று கொண்டிருந்த மனைவி கோர விபத்தில் பலி
களுத்துறை - புலத்சிங்கள பிரதேசத்தில் தனது கணவருடன் மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்த பெண் ஒருவர் விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளார்.
கடந்த 2ஆம் திகதி மாலை புலத்சிங்களவில் இருந்து, கண்டியில் உள்ள கணவரின் வீட்டில் நடைபெறவிருந்த தான நிகழ்வொன்றில் பங்கேற்பதற்காக கணவனுடன் மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்த போதே இவ்வாறு விபத்து சம்பவித்துள்ளது.
விபத்தில் 38 வயதான சதுரிகா தில்ருக்ஷி ரத்நாயக்க என்ற பட்டதாரியே உயிரிழந்துள்ளார்.
மரண விசாரணை
கேகாலை நீதிமன்ற சந்திப்பில் மோட்டார் சைக்கிள் மெதுவாக முன்னோக்கி சென்று கொண்டிருந்த பொழுது பின்னால் வந்த பேருந்து மோதியுள்ளது.

இதன் காரணமாக மோட்டார் சைக்கிள் கவிழ்ந்து இருவரும் காயமடைந்த நிலையில் கேகாலை போதனா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிறிது நேரத்திலேயே சதுரிகா உயிரிழந்தார்.
விபத்தின் போது பேருந்தின் இடது முன் சக்கரம் அவரது கழுத்தின் மீது ஏறியதால் ஏற்பட்ட பலத்த காயம் காரணமாக உயிரிழந்துள்தளாக மரண விசாரணை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.