தெற்கு கடலில் சிக்கிய மீன்பிடிப் படகு : ரூ.3பில்லியன் பெறுமதியான போதைப்பொருட்கள் மீட்பு
இலங்கையின் தெற்கே ஆழ்கடல் பகுதியில் கடற்படையினரால் நேற்று(04.11.2026) கைப்பற்றப்பட்ட பலநாள் மீன்பிடிப் படகில் இருந்து சுமார் ரூ. 3 பில்லியன் பெறுமதியான போதைப்பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.
100 கிலோகிராமுக்கும் அதிகமான ஐஸ் போதைப்பொருள், 50 கிலோகிராமுக்கும் அதிகமான ஹெரோயின் போதைப்பொருட்கள் அடங்கியதாக சந்தேகிக்கப்படும் சுமார் 10 மூட்டைகள் இதன்போது மீட்கப்பட்டுள்ளன.
மேலதிக விசாரணைகள் மற்றும் சட்ட நடவடிக்கை
நேற்று விசேட கடற்படை நடவடிக்கையின்போது குறித்த படகு கைப்பற்றப்பட்டது.

இன்று(05.11.2026) திக்கோவிட்ட மீன்பிடித் துறைமுகத்திற்கு கொண்டுவரப்பட்ட படகை ஆய்வு செய்தபோது இந்த போதைப்பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டதாக பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர தெரிவித்துள்ளார்.
படகும் அதிலிருந்த பணியாளர்களும் மேலதிக விசாரணைகள் மற்றும் சட்ட நடவடிக்கைகளுக்காக, அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
கொழும்பிலுள்ள அடுக்குமாடி குடியிருப்பாளர்களுக்கு ஏற்பட்டுள்ள சிக்கல்! சிக்கனமாக பயன்படுத்துமாறு எச்சரிக்கை