நாட்டை விட்டு தப்பியோடிய முன்னாள் ஜனாதிபதியின் மகனும் அவர் மனைவியும்..!
முன்னாள் ஜனாதிபதி ஒருவரின் மகன் அவரது மனைவியுடன் நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக தென்னிலங்கை ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.
கடந்த நாட்களில் அவர் நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக குறிப்பிடப்பட்டது.
இந்தநிலையில்,முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் மகன் தஹாம் சிறிசேனவும் மற்றும் அவரது மனைவியும் நாட்டை விட்டு தப்பிச் சென்றதாக புலனாய்வு ஊடகவியலாளர் கீர்த்தி ரத்நாயக்க சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.
தஹாம் சிறிசேன மற்றும் அவரது மனைவியின் குடும்பத்தினருக்கு எதிராக 500 கோடி ரூபாய்க்கும் அதிகமான வரி மோசடி தொடர்பான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
தஹாம் திருமணம் செய்துகொண்ட குடும்பத்தின் வணிக நிறுவனமான எல்காடோ (Elcato), ஆரம்பத்தில் நுழைவாயில்கள் (gates) தயாரிக்கும் நிறுவனமாக இருந்து, பின்னர் வாகன இறக்குமதி தொழிலில் ஈடுபட்டு முறைகேடுகளில் ஈடுபட்டதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இந்த வழக்கு விசாரணையின் ஒரு பகுதியாக, அகில ரவிநக வீரரத்ன மற்றும் அஸ்வினி டயஸ் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், குடும்ப உறுப்பினர்களுக்கு வெளிநாட்டு பயணத்தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்த விடயங்கள் தொடர்பில் ஆராய்கின்றது NewsInsightTamil நிகழ்ச்சி..