அமெரிக்காவில் 200 பில்லியன் டொலர் முதலீடு! ட்ரம்பின் அறிவிப்பு
அமெரிக்காவில் சுமார் 200 பில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான திட்டங்களில் முதலீடு செய்வதற்கு தென்கொரியா திட்டமிட்டுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.
இருப்பினும், இதில் உள்ளடக்கப்பட்டுள்ள அலாஸ்கா திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயு (LNG) திட்டத்திற்கான 54 பில்லியன் டொலர் பெறுமதியான குழாய் இணைப்புத் திட்டம் தொடர்பில் இதுவரை இறுதி தீர்மானம் எட்டப்படவில்லை என தென்கொரியா தெரிவித்துள்ளது.
200 பில்லியன் டொலர் முதலீடு
கடந்த ஆண்டு அமெரிக்காவுடன் எட்டப்பட்ட வர்த்தக ஒப்பந்தத்தின் கீழ், தென்கொரியா வழங்க ஒப்புக்கொண்ட 350 பில்லியன் டொலர் மூலோபாய முதலீட்டுத் தொகுப்பின் ஒரு பகுதியாகவே இந்த புதிய முதலீடுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

வெள்ளை மாளிகையின் ஓவல் அலுவலகத்தில் இருந்து உரையாற்றிய ஜனாதிபதி ட்ரம்ப், இந்த முதலீட்டின் கீழ் எட்டு பெரிய அளவிலான அணுமின் நிலையங்கள், இயற்கை எரிவாயுக் குழாய் இணைப்பு மற்றும் டெக்சாஸில் 6 கிகாவாட் மின் உற்பத்தி நிலையம் என்பன அமைக்கப்படவுள்ளதாகக் குறிப்பிட்டார்.
எனினும், வணிக ரீதியான மற்றும் சட்டப்பூர்வ நிபந்தனைகள் பூர்த்தி செய்யப்பட்டால் மட்டுமே அலாஸ்கா எரிவாயுக் குழாய் திட்டம் முன்னெடுக்கப்படும் என தென்கொரிய அரசாங்கம் தெளிவுபடுத்தியுள்ளது.
இயற்கை எரிவாயு மின் திட்டம்
திட்டங்களின் வணிகச் சாத்தியக்கூறுகள் மற்றும் சட்ட நடைமுறைகள் குறித்து ஆய்வு செய்யப்படும் என்றும், முதலீடு செய்வது அல்லது அதன் அளவு குறித்து இன்னும் முடிவெடுக்கப்படவில்லை என்றும் தென்கொரிய தொழிற்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.
[DCSMNN
தென்கொரிய ஜனாதிபதி லீ ஜே மியுங்கும் இதே கருத்தை உறுதிப்படுத்தியுள்ளார்.
அதேவேளை, செயற்கை நுண்ணறிவு (AI) தரவு மையங்களுக்கு மின்சாரம் வழங்குவதற்காக டெக்சாஸில் உள்ள இயற்கை எரிவாயு மின் திட்டத்தில் 22.3 பில்லியன் டொலர்களையும், எட்டு அணு உலைகளைக் கட்டுவதற்கு 120 பில்லியன் டொலர்களையும் முதலீடு செய்யவுள்ளதாக தென்கொரியா உறுதிப்படுத்தியுள்ளது.
வரவேற்கிறோம்... பிரித்தானியா ஐரோப்பிய ஒன்றியத்துடன் இணையும் திட்டத்துக்கு மேக்ரான் வரவேற்பு News Lankasri