ஒரே மாதத்தில் 72 பில்லியன் ரூபாய்.. நாட்டின் வரி வருமானம் தொடர்பில் அரசாங்கம் வெளியிட்ட தகவல்
நாட்டின் வருமானம் 2 டிரில்லியன் ரூபாய் அளவைத் தாண்டியுள்ளதாக இலங்கை உள்நாட்டு இறைவரித் திணைக்களம் அறிவித்துள்ளது.
இதற்கமைய, இந்த ஆண்டு ஜனவரி 1ஆம் திகதி முதல் செப்டம்பர் 30ஆம் திகதி வரையிலான காலப்பகுதியில் உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தினால் வசூலிக்கப்பட்ட மொத்த வருவாய் 2,040 பில்லியன் ரூபாய் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2025ஆம் ஆண்டின் இதே காலப்பகுதியில் வசூலிக்கப்பட்ட 1,642 பில்லியன் ரூபாயுடன் ஒப்பிடுகையில், இது 398 பில்லியன் ரூபாய் அதிகரிப்பாகும்.
72 பில்லியன் ரூபாய் அதிகரிப்பு
உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் 2026ஆம் ஆண்டுக்கான வருடாந்த வருவாய் மதிப்பீடு 2,401 பில்லியன் ரூபாய் எனவும், அதில் செப்டம்பர் 30ஆம் திகதி நிலவரப்படி 85 சதவீதம் எட்டப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில், கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தில் வசூலிக்கப்பட்ட 216 பில்லியன் ரூபாயுடன் ஒப்பிடுகையில், இந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தில் மட்டும் 72 பில்லியன் ரூபாய் அதிகரித்து, 288 பில்லியன் ரூபாய் வருவாய் வசூலிக்கப்பட்டுள்ளது.
வரி செலுத்துவோர் தாமாக முன்வந்து வரி செலுத்துவதற்கான ஊக்கம் மற்றும் வரி நிர்வாகத்தின் செயல்திறன் ஆகியவை இந்த வருவாய் வளர்ச்சிக்கு காரணமாக அமைந்துள்ளதாக உள்நாட்டு இறைவரித் திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.
சிறுத்தை படத்தில் கார்த்தியின் மகளாக நடித்த குழந்தையா இவர்... ஆளே மாறிட்டாரே, லேட்டஸ்ட் போட்டோஸ் Cineulagam